ARTICLE AD BOX
தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள பூவலூர் கிராமத்தில் நவீன் என்பவர் வசித்து வருகிறார். இவர் திருப்பூரில் இருக்கும் தனியார் நிறுவனத்தில் வேலை பார்க்கிறார். பட்டியல் இனத்தைச் சேர்ந்த நவீன் வேறு சமூகத்தைச் சேர்ந்த ஐஸ்வர்யா என்ற பெண்ணை ஐந்து ஆண்டுகளாக காதலித்து வந்தார். இதனை அறிந்த இரு குடும்பத்தினரும் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.
கடந்த டிசம்பர் 31ஆம் தேதி காதலர்கள் பெற்றோர் எதிர்ப்பை மீறி திருமணம் செய்து கொண்டனர். இதனால் கோபம் அடைந்த ஐஸ்வர்யாவின் குடும்பத்தினர் பல்லடம் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் ஐஸ்வர்யாவை மீட்டு அவரது பெற்றோரிடம் ஒப்படைத்தனர். ஜனவரி 7ஆம் தேதி நவீன் வத்தி கோட்டைகாவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
அந்த புகாரில் ஐஸ்வர்யாவை என்னிடமிருந்து பிரித்து கொலை செய்ததாக தெரிவித்தார். யாருக்கும் தெரியாமல் ஐஸ்வர்யாவின் உடலை எரித்ததாகவும் குற்றம் சாட்டினார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தியதில் ஐஸ்வர்யாவை கொலை செய்தது உறுதியானது. ஐஸ்வர்யாவின் தந்தை பெருமாள் தாயார் மற்றும் அவரது உறவினர்களை போலீசார் கைது செய்தனர்.
முதலில் ஐஸ்வர்யாவை ஊருக்கு அழைத்துச் சென்று ஒரு புளியமரத்து கிளையில் தூக்கில் தொங்க விட்டனர். அவர் இறந்து விட்டதாக நினைத்து பெருமாள் அந்த கயிற்றை அறுத்து விட்டார். இதனால் ஐஸ்வர்யா கீழே விழுந்தார். ஆனால் அவர் இறக்கவில்லை. இதனால் பெருமாளும், ரோஜாவும் இணைந்து ஐஸ்வர்யாவின் கழுத்தை நெரித்து கொலை செய்துவிட்டு உடலை யாருக்கும் தெரியாமல் எரித்துள்ளனர். இதனால் போலீசார் அவர்களை கைது செய்தனர். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது