ARTICLE AD BOX
கோவை: ஜெயலலிதாவின் கொடநாடு எஸ்டேட்டில் நடந்த ெகாலை, கொள்ளை வழக்கு சிபிசிஐடி போலீசுக்கு மாற்றம் செய்யப்பட்டு மீண்டும் விசாரணை நடந்து வருகிறது. குற்றவாளிகள் மற்றும் பல்வேறு சாட்சிகளுக்கு சம்மன் அனுப்பப்பட்டு கோவையில் உள்ள சிபிசிஐடி அலுவலகத்தில் விசாரணை நடந்து வருகிறது.
இந்நிலையில், கொடநாடு எஸ்டேட் மேலாளர் நடராஜனுக்கும் சம்மன் அனுப்பப்பட்டிருந்தது. அதன்படி நேற்று காலை கோவை போலீஸ் பயிற்சி பள்ளி வளாகத்தில் உள்ள சிபிசிஐடி அலுவலகத்தில் மேலாளர் நடராஜன் ஆஜரானார். அவரிடம் சிபிசிஐடி எஸ்பி மாதவன் மற்றும் ஏடிஎஸ்பி முருகவேல் ஆகியோர் எஸ்டேட்டில் இருந்த ஆவணங்கள் உட்பட பல்வேறு விவரங்களை கேட்டு 7 மணி நேரம் விசாரணை நடத்தினர். அவர் அளித்த வாக்குமூலத்தை போலீசார் பதிவு செய்து கொண்டனர்.
The post கொடநாடு எஸ்டேட் மேலாளரிடம் 7 மணி நேரம் விசாரணை appeared first on Dinakaran.