ARTICLE AD BOX
கடைகளில் நெய் வாங்கி பயன்படுத்துபவர்களா நீங்கள் ஆனால் இனி வீட்டிலேயே எவ்வளவு நெய் வேண்டுமானாலும் செய்யலாம். அதற்கு ஐஸ் கட்டிகள் மிகவும் முக்கியம். அப்படி ஐஸ் கட்டிகள் வைத்து ஈஸியாக வீட்டில் நெய் செய்வது பற்றி லைஃப்ஸ்டைல் ரெஸிபி யூடியூப் பக்கத்தில் கூறியிருப்பதாவது,
நம் தினமும் வாங்கக்கூடிய பாலில் இருந்தே வெண்ணெய் நெய் பிரித்து எடுக்கலாம். ஒரு வருடம் ஆனாலும் கெட்டுப்போகாத அளவுக்கு நெய் எடுத்து சேமித்து வைக்கலாம். இதற்கு பசும்பால், பாக்கெட் பால் எது வேண்டுமானாலும் பயன்படுத்தலாம்.
முதலில் பாலை காய்ச்சும் போது பால் அடிப்பிடிக்காமல் ஒரு ஸ்பூனை வைத்து கரைத்து விட வேண்டும். கொழுப்பு சத்துள்ள பால் பாக்கெட் வாங்கி இதற்கு பயன்படுத்தலாம்.
நன்கு காய்ச்சிய பாலை ஃப்ரீசரில் அரை மணி நேரம் வைத்து எடுக்கவும். பின்னர் பால் மேல் ஆடை இருக்கும் அந்த ஆடையை எடுத்து ஒரு டப்பாவில் சேர்த்து வைக்கவும். ஆடை சேமிக்கும் போதே அதில்3 முதல் 4 ஸ்பூன் புளித்த தயிர் கட்டாயம் சேர்ர்த்து நன்கு கலந்து வைக்கவும்.
தினமும் இதேபோல ஆடைகளை சேர்த்து ஃப்ரீசரில் வைக்கவும். இப்படியாக நிறைய ஆடைகள் சேர்ந்ததும் இதனை வெளியே எடுத்து கலந்து மிக்ஸி ஜாரில் சேர்த்து அதில் சிறிது ஐஸ் கட்டிகளையும் போட்டு அடித்து எடுத்துக் கொள்ளவும்.
புத்திசாலி இல்லத்தரசிகளுக்கு சூப்பர் டிப்ஸ் kitchen tips in tamil ghee from milk
இப்போது ஒரு கிளாஸ் தண்ணீர் ஊற்றி ஐஸ் கட்டியாக்கி வைத்துள்ள அந்த கிளாஸை அந்த பாத்திரத்திற்குள் வைத்து ஒரு 5 நிமிடம் தேய்த்து விடவும். நன்றாக கலந்து விட்டதும் பத்து நிமிடம் மூடி வைக்கவும்.
அவ்வளவு தான் வெண்ணையும் தண்ணீரும் தனித்தனியாக பிரிந்து வரும். மேலே இருக்கும் வெண்ணையை திரட்டி எடுத்து வைக்கவும். பின்னர் அதற்கு மேலும் சிறிது ஐஸ் கட்டியை வைத்துக் கொள்ளவும் மேலும் அதில் உள்ள தண்ணீர் வடிந்து வரும். பின்னர் இதை கடாய் வைத்து எப்போதும் போல நெய் காய்ச்சி எடுக்கலாம்.
சிறிது முருங்கை இலை போட்டு நெய் காய்ச்சினால் சுவையாக இருக்கும். பின்னர் இதை கைப்படாமல் சேமித்து வைக்கலாம்.