ARTICLE AD BOX
கையில் இல்லாத மேட்சை.. அப்படியே மாற்றி வென்ற இந்தியா! எப்படி? நியுஸி. தோற்க காரணமான அந்த 2 பேர்!
துபாய்: நேற்று நியூசிலாந்துக்கு எதிராக நடந்த ஐசிசி சாம்பியன்ஸ் லீக் ஆட்டத்தில் தோற்றுவிடும் என்று எதிர்பார்க்கப்பட்ட இந்தியா.. ஆட்டத்தின் போக்கையே மாற்றி வென்றுள்ளது. ஆட்டத்தின் பெரும்பாலான பகுதி நியூசிலாந்து சாதகமாக இருந்த நிலையில்.. கடைசி கட்டத்தில் நடந்த திருப்பங்கள் காரணமாக இந்தியா திரில் வெற்றி பெற்றது.
நேற்று முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து தொடக்கத்திலேயே திணற தொடங்கியது. நியூசிலாந்து என்று வந்துவிட்டாலே இந்தியா பேட்டிங்கில் சொதப்புவதுதான் சமீபத்திய டிரெண்ட். அந்த வகையில் ரோஹித் சர்மா வெறும் 15 ரன்களுக்கு அவுட் ஆனார். அதேபோல் கில் வெறும் 2 ரன்கள் எடுத்து அவுட் ஆனார்.

சரிவை சமாளிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட கோலியும் சர்ப்ரைஸ் கேட்ச் கொடுத்து.. வெறும் 11 ரன்கள் எடுத்த அவுட் ஆனார். பிலிப்ஸ் பிடித்த கேட்சை அவரை மட்டுமின்றி மொத்த மைதானதியும் ஸ்டன் ஆகியது.
சரிவை மீட்ட ஐயர் - கடுப்பாக்கிய பாண்டியா
அதன்பின் இந்திய அணியை சரிவில் இருந்து மீட்க வேண்டிய கட்டாயம் மிடில் ஆர்டருக்கு இருந்தது. அதை உணர்ந்து நிதானமாக ஆடினார் ஷ்ரேயாஸ் ஐயர். 98 பந்துகள் பிடிக்க ஷ்ரேயாஸ் நிதானமாக 79 ரன்கள் எடுத்து மிடில் ஆர்டர் சரிவை மீட்டார் . இதில் 4 பவுண்டரி 2 சிக்ஸர் அடக்கம்.
அதேபோல் இன்னொரு பக்கம் அக்சர் பட்டேல் நிதானமாக ஆடி 61 பந்தில் 42 ரன்கள் எடுத்தார். ஐவரும் 3 பவுண்டரி 1 சிக்ஸர் என்று நம்பிக்கை அளித்தார்.
ஆனால் அதன்பின் வந்த ஹர்திக் பாண்டியாதான் ஆட்டத்தை கடைசி வரை கொண்டு போனார். 45 பந்துகளில் 45 ரன்கள் எடுத்தாலும்.. கடைசி ஓவரில் மட்டும் 3 டாட் பால், அதன்பின் விக்கெட் ஆனது என்று கடைசி ஓவரில் பெரிதாக ரன் அடிக்கும் கடுப்பாக்கினார். இதனால் அப்படி இப்படி திணறி ஒரு வழியாக இந்திய அணி 249 ரன்களை எடுத்தது.
அதிரடி நியூசிலாந்து
அதன்பின் இறங்கிய நியூசிலாந்து அணி தொடக்கத்தில் இருந்தே அதிரடி காட்டியது. வில் யங் 22லும், ரச்சின் ரவீந்திரா 6 ரன்களிலும் அவுட் ஆனாலும் கூட கேன் வில்லியம்சன் நிதானமாக ஆடி 81 ரன்கள் எடுத்தார். 120 பந்துகளில் சிக்ஸ் எதுவும் அடிக்காமல் 7 பவுண்டரிகளை இவர் அடித்தார்.
நிதானத்தின் உருவமாக இவர் ஆடிய நிலையில், நியூசிலாந்து அணியின் கை ஒரு கட்டத்தில் ஓங்கியது. மற்றவர்கள் ரன் எதுவும் அடிக்கவில்லை என்றாலும் பெரிதாக விக்கெட் சரியாமல் பார்த்துக்கொண்டனர். நேற்று இந்திய அணியில் பாஸ்டர் பவுலர் என்று பார்த்தால் ஷமி மட்டும்தான். ஹர்திக் பாண்டியா ஆல் ரவுண்டர். மற்ற எல்லோருமே ஸ்பின் பவுலர்கள்தான்.
இது தொடக்கத்தில் சந்தேகத்தை ஏற்படுத்தினாலும்.. கடைசி கட்டத்தில் வரிசையாக ஸ்பின் பவுலர்கள்தான் விக்கெட்டுகளை எடுத்தனர். மிடில் ஆர்டரில் பிலிப்ஸ், பிரேஸ்வெல், சான்ட்னர், ஹென்றி அதோடு ஓப்பனர் ரச்சின் ரவீந்திரா என்று மொத்த அணியையும் அடுத்தடுத்து காலி செய்தது வருண் சக்ரவர்த்திதான்.
அதிலும் 8, 9 வது விக்கெட்டுகளை அவர் எடுத்தது, மிடில் ஆர்டரை காலி செய்ததுதான் இந்திய அணி பக்கம் ஆட்டம் திரும்ப காரணமாக மாறியது. நேற்று ஷ்ரேயாஸ் ஐயர் பேட்டிங்கில் சிறப்பாக செயல்பட்டது.. பவுலிங்கில் வருண் சக்ரவர்த்தி ஆட்டத்தை மாற்றியது ஆகியவை இந்திய அணியின் வெற்றிக்கு மிக முக்கியமான காரணங்களாக மாறின.