ARTICLE AD BOX
சென்னை: இலவசம் எனக்கூறி கேரி பேக்கிற்கும் பணம் வசூலித்த ஜவுளி நிறுவனம் வாடிக்கையாளருக்கு ரூ.15,000 இழப்பீடு வழங்க சென்னை மாவட்ட நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பெரம்பூரில் உள்ள ஜவுளி நிறுவனத்தில் அயனாவரத்தை சேர்ந்த ஸ்ரீதர் என்பவர் 2023ல் ரூ.8,373க்கு உடைகளை வாங்கினார். உடையை எடுத்துச் செல்ல 2 பேப்பர் கேரி பேக் வழங்கப்பட்டு, பின்னர் ரூ.16 வசூலிக்கப்பட்டுள்ளது. சென்னை மாவட்ட நுகர்வோர் குறை தீர்வு ஆணையத்தில் ஸ்ரீதர் புகார் மனு அளித்தார். 2 மாதங்களில் வழங்க தவறினால் தொகையை செலுத்தும் வரை ஆண்டுக்கு 9% வட்டியுடன் இழப்பீட்டை வழங்க உத்தரவிட்டுள்ளது.
The post கேரி பேக்கிற்கு பணம் வசூலித்த வாடிக்கையாளருக்கு ரூ.15,000 இழப்பீடு தர ஆணை!! appeared first on Dinakaran.