ARTICLE AD BOX
கேரள மாநிலத்தில் இன்று மட்டும் தனித்தனி சம்பவங்களில் 10 ஆம் வகுப்பு மாணவர்கள் இருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அட்டிங்கலில் உள்ள தனது வீட்டில் 15 வயது சிறுவன் அறையின் மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். அதே நேரத்தில் அருகிலுள்ள மாரநல்லூரில் உள்ள அதே வயதுடைய மாணவி ஒருவர் மின்விசிறி கொக்கியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். 10 ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகளுக்கு இடையே இந்த சம்பவங்கள் நடந்தது குறிப்பிடத்தக்கது.