ARTICLE AD BOX
சென்னை,
தமிழ் சினிமாவில் நடிகர் தனுஷ் நடித்த 3 படத்தில் கதாநாயகியின் தங்கையாக நடித்து நடிகையாக அறிமுகமானார் கேப்ரியல்லா. குழந்தை நட்சத்திரமாக நடித்து வந்த கேப்ரியல்லா, ஜோடி நம்பர் 1 நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டு பிரபலமானார். அதன்பின் பிக்பாஸ் 4 சீசனில் போட்டியாளராக கலந்து கொண்டார். அதன்பின் பிக்பாஸ் ஜோடிகள் நிகழ்ச்சியில் கலந்து ரன்னர்அப் இடத்தை பிடித்தார்.
தற்போது இவர் துஷ்யந்த் ஜெயபிரகாஷுடன் இணைந்து நடித்துள்ள திரைப்படம் வருணன். இப்படத்தை யாக்கை பிலிம்ஸ் தயாரிப்பில் ஜெயவேல்முருகன் இயக்கியுள்ளார். படத்தில் ராதா ரவி, சரண்ராஜ், ஷங்கர்நாக் விஜயன், ஹரிபிரியா, ஜீவா ரவி, மகேஷ்வரி மற்றும் பலர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர்/ படத்தின் இசையை போபோ சாஷி மேற்கொண்டுள்ளார். ஒளிப்பதிவை ஸ்ரீராம சந்தோஷ் மேற்கொண்டுள்ளார்.
இப்படம் வருகிற மார்ச் மாதம் 14-ந் தேதி வெளியாக உள்ளது. இந்த நிலையில் தற்போது இப்படத்தின் டிரெய்லர் வெளியாகி உள்ளது. இந்த டிரெய்லரை விஜய் சேதுபதி மற்றும் இயக்குனர் விஷ்ணுவர்தன் ஆகியோர் தங்களின் எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ளனர்.