ARTICLE AD BOX
Published : 18 Mar 2025 09:35 AM
Last Updated : 18 Mar 2025 09:35 AM
கே.பி.ஜெகன் இயக்கி நடிக்கும் ‘ரோஜா மல்லி கனகாம்பரம்’!

விஜய் நடித்த ‘புதிய கீதை’, நந்தா நடித்த ‘கோடம்பாக்கம்’, சேரன் நடித்த ‘ராமன் தேடிய சீதை’ ஆகிய படங்களை இயக்கியவர் கே.பி.ஜெகன். இவர், மாயாண்டி குடும்பத்தார், மிளகா, நாகராஜ சோழன் எம்.ஏ, எம்.எல்.ஏ உட்பட பல படங்களில் நடித்துள்ளார். இவர் இப்போது 'ரோஜா மல்லி கனகாம்பரம்’ என்ற படத்தை இயக்குகிறார். உண்மை சம்பவத்தைத் தழுவி உருவாகும் இப்படத்தில் அவர், கதையின் நாயகனாக நடிக்கிறார்.
‘யுனைடெட் ஆர்ட்ஸ்’, எஸ். கே. செல்வகுமார் தயாரிக்கிறார். இப்படத்தின் தொடக்க விழா மற்றும் டைட்டில் டீஸர் படப்பிடிப்பு திருச்செந்தூர் அருகே நடைபெற்றது.
படம் பற்றி இயக்குநர் கே.பி.ஜெகன் கூறும்போது, “கடந்த 2017-ம் அண்டு என் வாழ்வில் நடந்த உண்மைச் சம்பவத்தை மையப்படுத்தி இதன் கதை உருவாக்கப்பட்டுள்ளது. மற்றவர்கள் நடித்தால் சரியாக இருக்காது என்பதால் நானே கதையின் நாயகனாக நடிக்கிறேன். நான் ஜெகனாகவே படத்தில் வருகிறேன். மற்ற நடிகர், நடிகைகள், டெக்னீஷியன்கள் விவரங்களை விரைவில் அறிவிப்போம்” என்றார்.
Follow
FOLLOW US
அன்பு வாசகர்களே....
இந்த ஊரடங்கு காலத்தில் வீட்டை விட்டு வெளியே வராமல் நமக்கு நாமே சமூக விலகல் ( Social Distancing) செய்து கொள்வோம். செய்தி ஊடகங்களின் வழியே உலகுடன் தொடர்பில் இருப்போம். பொதுவெளியில் இருந்து தனிமைப்படுத்திக் கொண்டு கரோனா பரவலைத் தடுப்பதில் நம் பங்கை முழுமையாக இந்த சமூகத்துக்கு அளிப்போம்.
CoVid-19 கரோனா தடுப்பு / விழிப்புணர்வு கையேடு - இலவசமாக டவுன்லோடு செய்து பயன்பெறுங்கள்!
- வாசகர்கள் நலனில் அக்கறையுடன் இந்து தமிழ் திசை
தவறவிடாதீர்!
- ‘எமர்ஜென்சி’யை ஆஸ்கருக்கு அனுப்ப வேண்டுமா? - கங்கனா ரனாவத் காட்டம்
- தமிழகத்தில் பள்ளி இறுதி வகுப்பு வரை தமிழை பயிற்று மொழியாக்கி அரசு சட்டம் இயற்ற வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
- காசா மீது இஸ்ரேல் கடும் தாக்குதல்: 100-க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு
- ஓய்வூதியத்தை உயர்த்தி வழங்க கோரி சத்துணவு ஊழியர் ஏப்.24-ம் தேதி போராட்டம்