“கெட் அவுட் மோடி..” முழக்கமிட்ட திமுக இளைஞரணியினர்! ட்ரெண்டான வீடியோ

4 days ago
ARTICLE AD BOX

“கெட் அவுட் மோடி..” முழக்கமிட்ட திமுக இளைஞரணியினர்! ட்ரெண்டான வீடியோ

Chennai
oi-Halley Karthik
Subscribe to Oneindia Tamil

சென்னை: பிரதமர் தமிழகம் வந்தால் அவரை 'கெட் அவுட் மோடி' சொல்லி விரட்டுவோம் என உதயநிதி ஸ்டாலின் கூறியிருந்தார். இது குறித்து பாஜக மாநில தலைவர் அண்ணாமலை சவால் விட்ட நிலையில், திமுக இளைஞரணியினர் 'கெட் அவுட் மோடி' கூறி வீடியோவை வெளியிட்டிருக்கின்றனர்.

தமிழ்நாட்டிற்கான கல்வி நிதியை விடுவிக்க மத்திய அரசு மறுப்பு தெரிவித்திருக்கிறது. மும்மொழிக் கொள்கையை முன்வைக்கும் தேசிய கல்விக்கொள்கையை ஏற்றுக்கொண்டால்தான் நிதியை விடுவிப்போம் என மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் சாகு கூறியிருந்தார்.

Udhayanidhi Stalin Modi Tamil Nadu

இதற்கு மாணவர்கள், பெற்றோர்கள், கல்வியாளர்கள், அரசியல் தலைவர்கள் என பல்வேறு தரப்பினரும் கடும் கண்டனம் தெரிவித்தனர். தமிழகத்தில் இந்தியா கூட்டணி கட்சியின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டமும் நடைபெற்றது. இதில் பங்கேற்றிருந்த துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், "தமிழகத்தின் உரிமைகளை பறிக்க முயன்றபோது, கடந்த முறை தமிழக மக்கள் Go Back Modi என்று சொல்லி துரத்தி அடித்தார்கள். மீண்டும் இதே போல தமிழ்நாட்டு மக்களிடம் முயன்றால், Go Back Modi என்று சொல்வதற்கு பதிலாக, 'Get Out Modi' என்று கூறி துரத்துவார்கள்" என்று கூறியிருந்தார்.

இவரது பேச்சு பாஜக மத்தியில் கடும் எதிர்ப்பை கிளப்பியிருந்தது. இது குறித்து பேசிய அண்ணாமலை, "உலக நாடுகள் சிவப்பு கம்பளம் விரித்து அந்த மனிதனை வரவேற்பதற்காக கைகட்டி காத்திருக்கிறார்கள். ஆனால் இங்குள்ளவர்கள் அவரை விமர்சிக்கிறார்கள். உங்களால் முடிந்தால் Get Out Modi என சொல்லி பாருங்கள்" என்று சவால் விட்டிருந்தார். மட்டுமல்லாது துணை முதல்வரின் வீட்டை முற்றுகையிடுவதாகவும் பாஜகவினர் கூறியிருந்தனர். இது இருவருக்கும் இடையேயான வார்த்தைப்போராக வெடித்தது.

விமர்சனங்களுக்கு பதில் அளித்த உதயநிதி, "வீட்டைதானே முற்றுகையிடப்போகிறார்கள்? வரச்சொல்லுங்கள். நான் வீட்டில்தான் இருப்பேன். மாலை ஒரு நிகழ்ச்சியிருக்கிறது. முடித்துவிட்டு வரப்போகிறேன்" என்று கூலாக பதிலளித்துள்ளார். பதிலுக்கு அண்ணாமலை, "நாளை காலை நான் Get Out Stalin என ட்வீட் பதிவிட போகிறேன். அது எவ்வளவு போகப்போகிறது என்று நீங்களே பாருங்கள்" என கூறியுள்ளார். இரு இளம் தலைவர்களின் கருத்து மோதல் தமிழ்நாட்டின் அரசியல் தளத்தில் கடுமையாக எதிரொலிக்க தொடங்கியுள்ளது.

இந்நிலையில் தமிழ்நாடு மாணவர் இயக்கங்களின் கூட்டமைப்பின் (FSO-TN) மாநிலப் பொறுப்பாளர்கள் ஆலோசனைக் கூட்டம் அறிவாலயத்தில் நடைபெற்றது. இதில் உதயநிதி ஸ்டாலின் முன்னிலையில், இளைஞர்களும், மாணவர்களும் 'Get Out Modi' என்று முழக்கமிட்டனர். இது தொடர்பான வீடியோ சோஷியல் மீடியாக்களில் பரவலாக ஷேராகி வருகிறது.

More From
Prev
Next
English summary
Udhayanidhi Stalin had stated that if the Prime Minister visits Tamil Nadu, they would chase him away by shouting "Get Out Modi." Following this, BJP state president Annamalai issued a challenge. In response, DMK youth wing members have released a video chanting "Get Out Modi.
Read Entire Article