ARTICLE AD BOX
கூலி படத்தில் மாளவிகா மோகனன் நடிக்க வேண்டியதா?.. அப்போ ஸ்ருதிஹாசனுக்கு இந்த ரோல் தானா?
சென்னை: கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வெளியான பேட்ட படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் தான் நடிகை மாளவிகா மோகனன். இன்ஸ்டாகிராமில் அவர் வெளியிடும் புகைப்படங்களை பார்க்கவே ஏகப்பட்ட பேர் அவருக்கு ரசிகர்களாக உள்ளனர்.
பேட்ட படத்திற்கு பிறகு லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய் நடித்த மாஸ்டர் படத்தில் ஹீரோயினாக நடித்து ஏகப்பட்ட ரசிகர்களை கவர்ந்தார் மாளவிகா மோகனன். அதன் பின்னர், தனுஷ் உடன் இணைந்து மாறன், சியான் விக்ரமின் தங்கலான் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ள அவர் அடுத்ததாக கார்த்தியின் சர்தார் 2 படத்திலும் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.
இந்நிலையில், சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில், நடிகை மாளவிகா மோகனன் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்க வேண்டிய படத்தில் தான் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க வேண்டியது என்றும் ஆனால், அந்த படம் மிஸ் ஆகிவிட்டது என்றும் கூறியிருப்பது ரசிகர்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது.
ரஜினிகாந்த் மகளாக: மாஸ்டர் படம் முடிந்த கையோடு லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்க வேண்டியது என்றும் கொரோனா பரவல் காரணமாக அந்த படம் அப்பபோது ஆரம்பிக்கவில்லை. அந்த படத்தில் ரஜினிகாந்தின் மகளாக தான் நடிக்க வேண்டியது. அந்த படம் திடீரென நிறுத்தப்பட்ட நிலையில், சூப்பர் ஸ்டார் மகளாக நான் நடிப்பது மிஸ் ஆகிவிட்டது எனக் கூறியுள்ளார்.
ஸ்ருதிஹாசன் ரோல் இதுதானா?: அந்த படம் தான் தற்போது கூலியாக உருவாகி வருகிறதா என்றும் ரஜினிகாந்தின் மகளாக ஸ்ருதிஹாசன் நடித்து வருகிறாரா என்கிற கேள்விகளை ரசிகர்கள் கிளப்பி வருகின்றனர். நடிகர் கமல்ஹாசனின் ரியல் மகள் சூப்பர் ஸ்டாருக்கு நிச்சயமாக ஜோடியாக நடிக்க மாட்டார் என்றும் ரீல் மகளாகத்தான் நடிப்பார் என ஏற்கனவே எதிர்பார்க்கப்பட்ட நிலையில், மாளவிகா மோகனனின் பேட்டி மூலம் அது கிட்டத்தட்ட கன்ஃபார்ம் ஆகியிருப்பதாக ரசிகர்கள் கூறி வருகின்றனர்.
மாளவிகா மோகனனுக்கு பெரிய வெற்றி கிடைக்குமா?: தமிழில் அவர் அறிமுகமான பேட்ட, அடுத்து ஹீரோயினாக நடித்த மாஸ்டர் உள்ளிட்ட படங்கள் அவருக்கு நல்ல வரவேற்பை பெற்றுத் தந்தன. ஆனால், மாறன், தங்கலான் படங்கள் பெரிதாக ஓடவில்லை. இந்தியில் அவர் நடித்த யுத்ரா திரைப்படமும் சொதப்பி விட்டது. இந்நிலையில், பி.எஸ். மித்ரன் இயக்கத்தில் கார்த்தி நடித்து வரும் சர்தார் 2 அவருக்கு மிகப்பெரிய வெற்றிப் படமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.