ARTICLE AD BOX

Coolie: ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் கூலி திரைப்படத்தில் பூஜா ஹெக்டே வாங்கி இருக்கும் சம்பளம் குறித்த தகவல்கள் வெளியாகி இருக்கிறது.
வேட்டையன் திரைப்படத்தில் மிகப்பெரிய ஏமாற்றம் ரஜினிக்கு கிடைத்து விட்டதால் கூலி படத்தில் அதிக கவனம் செலுத்த வேண்டும் என லோகேஷ் கனகராஜிற்கு அறிவுறுத்தப்பட்டிருப்பதாகவும் தகவல்கள் கசிந்திருக்கிறது. இதனால் அதற்கான வேலைகளும் நடந்து வருகிறது.
லோகேஷ் கனகராஜ் என்று கூறினாலே அவருடைய சினிமாட்டிக் யூனிவர்ஸ் குறித்து தான் பலரும் பேசுவார்கள். அதுவும் இந்த படத்தில் இருக்க கூடாது என ரஜினிகாந்த் கண்டிப்புடன் சொல்லிவிட்டதாகவும் தகவல்கள் வெளியாகி இருக்கிறது.

இப்படத்தில் சத்யராஜ், தெலுங்கு நடிகர் நாகார்ஜுனா, ஸ்ருதிஹாசன், ஷொபீன் ஷாபீர் உள்ளிட்டோர் நடிக்க இருப்பதாக ஆரம்பத்திலேயே அறிவிப்புகள் வெளியாகிவிட்டது. அவர்களும் தொடர்ச்சியாக படப்பிடிப்புகளில் கலந்து கொண்டு வருகின்றனர்.
படப்பிடிப்பும் ஏறத்தாழ கடைசி கட்டத்தை நெருங்கிவிட்டது என்ற தகவலும் கசிந்து வருகிறது. இந்நிலையில் நேற்று சன் பிக்சர்ஸ் நிறுவனம் புதிய நடிகை ஒருவர் படத்தில் இணைவதாக அவருடைய அறிவிப்பு இன்று காலை வரும் என சர்ப்ரைஸ் கொடுத்தது.
ஆனால் அவர்கள் விஷயத்தை உடைப்பதற்கு முன்னாலேயே ரசிகர்கள் அந்த நடிகை பூஜா ஹெக்டே தான் என்பதை உடைத்து விட்டனர். இன்று காலை அதுவும் உண்மையாகிவிட்டது. ஆனால் பூஜா ஹெக்டே இப்படத்தில் ஒற்றை பாடலுக்கு மட்டுமே நடனமாட இருக்கிறார்.
ஏற்கனவே ஜெய்லர் திரைப்படத்தில் தமன்னாவின் ஒற்றை பாடல் மிகப்பெரிய அளவில் ஹிட் அடித்தது. அதேபோன்று இந்த முறையும் அனிருத் கூட்டணியுடன் இந்த பாட்டு பெரிய அளவில் வைரலாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் ஒற்றை பாடலுக்கு நடனமாட பூஜா ஹெக்டே மூணு கோடி வரை சம்பளமாக வாங்கி இருப்பதாகவும் தற்போது தகவல்கள் கசிந்திருக்கிறது. விஜயின் கடைசி திரைப்படமான ஜனநாயகன் திரைப்படத்திலும் பூஜா கிட்டே அவருடன் ஜோடி போட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.