‘கூலி’ படத்தில் நான் நடிக்கவில்லை…. நடிகர் சந்தீப் கிஷன் விளக்கம்!

4 hours ago
ARTICLE AD BOX

நடிகர் சந்தீப் கிஷன் கூலி படத்தில் நடிக்கவில்லை என கூறியுள்ளார்.'கூலி' படத்தில் நான் நடிக்கவில்லை.... நடிகர் சந்தீப் கிஷன் விளக்கம்!

நடிகர் சந்தீப் கிஷன் ஆரம்பத்தில் கௌதம் வாசுதேவ் மேனனிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்தவர். அதன் பின்னர் இவர் தெலுங்கில் சிநேக கீதம் என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். அடுத்தது இவர் தமிழில் யாருடா மகேஷ் படத்தின் மூலம் அறிமுகமாகி மாநகரம், மாயவன் என பல படங்களில் நடித்தார். மேலும் இவர், தனுஷ் நடிப்பில் வெளியான ராயன் திரைப்படத்தின் மூலம் ஏராளமான ரசிகர்களை தன் பக்கம் கவர்ந்திழுத்தார். அடுத்தது இவர், தளபதி விஜயின் மகன் ஜேசன் சஞ்சய் இயக்கத்தில் உருவாகும் புதிய படத்தில் கதாநாயகனாக நடிக்கிறார். இந்த படத்தினை லைக்கா நிறுவனம் தயாரிக்க தமன் இந்த படத்திற்கு இசையமைக்கிறார். 'கூலி' படத்தில் நான் நடிக்கவில்லை.... நடிகர் சந்தீப் கிஷன் விளக்கம்!இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஏற்கனவே வெளியாகி படப்பிடிப்புகளும் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் தான் சந்தீப் கிஷன், ரஜினியின் கூலி திரைப்படத்தில் இணைந்துள்ளார் என சமீபத்தில் செய்திகள் வெளியானது. இதுகுறித்து சமீபத்தில் நடந்த பேட்டியில் பேசிய சந்தீப் கிஷன், “நான் கூலி படத்தில் நடிக்கவில்லை. கூலி படப்பிடிப்பு தளத்திற்கு லோகேஷ் கனகராஜை ஒரு நண்பனாக சந்திக்க சென்றிருந்தேன். அப்போது ரஜினி சாருடன் புகைப்படம் எடுத்துக் கொண்டேன். நான் கூலி படத்தின் 45 நிமிட காட்சிகளைப் பார்த்துள்ளேன். நிச்சயம் இந்த படம் 1000 கோடி வசூல் செய்யும்” என்று தெரிவித்துள்ளார்.

Read Entire Article