ARTICLE AD BOX
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் கூலி படத்திற்காக நடிகை பூஜா ஹெக்டே வாங்கிய சம்பளம் எவ்வளவு என்பதை பார்க்கலாம்.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் திரைப்படம் கூலி. இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. இப்படத்தில் ரஜினிகாந்த் உடன் சத்யராஜ், ஸ்ருதிஹாசன், நாகார்ஜுனா என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது. இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். ஒளிப்பதிவாளராக கிரீஷ் கங்காதரன் பணியாற்றி உள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இதனிடையே கூலி படத்தில் நடிகை ஒருவர் குத்தாட்டம் போட்டுள்ளதாக தகவல் வெளியான நிலையில், அந்த நடிகை யார் என்கிற அதிகாரப்பூர்வ அறிவிப்பை சன் பிக்சர்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ளது. அதன்படி நடிகை பூஜா ஹெக்டே தான் இப்படத்தில் ஒரு பாடலுக்கு குத்தாட்டம் போட்டிருக்கிறார். ரஜினியுடன் அவர் ஆடும் பாடல் காட்சியை சென்னையில் படமாக்கி உள்ளனர். இப்பாடல் படத்தில் ஹைலைட்டான ஒன்றாக இருக்கும் என கூறப்படுகிறது.
இதையும் படியுங்கள்... கூலி ஷூட்டிங்கிற்கு பிரேக் விட்டு சிட்டாக பறந்த ரஜினி - எங்கு சென்றிருக்கார் தெரியுமா?

இந்நிலையில், கூலி படத்திற்காக ஒரு பாடலுக்கு குத்தாட்டம் போட நடிகை பூஜா ஹெக்டே வாங்கிய சம்பளம் எவ்வளவு என்கிற தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி அவருக்கு ரூ.2 முதல் 3 கோடி வரை சம்பளம் வழங்கப்பட்டு இருக்கிறதாம். இதுவரை தெலுங்கில் பல்வேறு படங்களில் பூஜா ஹெக்டே குத்தாட்டம் போட்டிருந்தாலும், கூலி படத்தில் ஆட தான் அவர் பெரிய தொகையை சம்பளமாக வாங்கி இருக்கிறாராம். கூலி திரைப்படம் வருகிற ஆகஸ்ட் மாதம் திரைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தற்போது தமிழ் சினிமாவில் பிசியான ஹீரோயினாக வலம் வரும் பூஜா ஹெக்டே, சூர்யாவுக்கு ஜோடியாக ரெட்ரோ என்கிற திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இப்படம் இந்த ஆண்டு மே 1ந் தேதி ரிலீஸ் ஆக உள்ளது. இதுதவிர விஜய்யின் கடைசி படமான ஜனநாயகன் படத்திலும் பூஜா தான் ஹீரோயின். மேலும் ராகவா லாரன்ஸ் இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் காஞ்சனா படத்தின் நான்காம் பாகத்திலும் நாயகியாக நடித்து வருகிறார் பூஜா ஹெக்டே.
இதையும் படியுங்கள்... Coolie : கூலி படத்தில் ரஜினியுடன் குத்தாட்டம் போடும் விஜய் பட ஹீரோயின்! அடடே இவரா?