ARTICLE AD BOX
நடிகை பூஜா ஹெக்டே கூலி படத்தில் இணைந்திருப்பதை படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகி வரும் திரைப்படம் தான் கூலி. இந்த படத்தை கைதி, மாஸ்டர், விக்ரம், லியோ ஆகிய படங்களை இயக்கிய லோகேஷ் கனகராஜ் இயக்குகிறார். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் 171வது படமாக உருவாகும் இந்த படத்தில் நாகார்ஜுனா வில்லனாக நடிக்கிறார். மேலும் இவர்களுடன் இணைந்து ஸ்ருதிஹாசன், சத்யராஜ், உபேந்திரா, சௌபின் சாகிர் மற்றும் பலர் நடிக்கின்றனர். அனிருத்தின் இசையிலும் கிரிஷ் கங்காதரனின் ஒளிப்பதிவிலும் இப்படம் உருவாகி வருகிறது. இந்த படத்தில் நடிகர் ரஜினி நெகட்டிவ் ஷேடட் ரோலில் நடிக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்புகள் ஏற்கனவே தொடங்கப்பட்டு ஐதராபாத், விசாகப்பட்டினம், சென்னை போன்ற பகுதிகளில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. வருகின்ற மார்ச் மாதத்தின் இறுதிக்குள் இப்படத்தின் படப்பிடிப்பை முடிக்க படக்குழு திட்டமிட்டு வருவதாக சொல்லப்படுகிறது. இதற்கிடையில் இந்த படத்தில் இருந்து வெளிவரும் ஒவ்வொரு அப்டேட்டுகளும் ரசிகர்கள் மத்தியில் படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகப்படுத்தி வருகிறது. அந்த வகையில் ஏற்கனவே இப்படத்தில் பாலிவுட் நடிகர் அமீர்கான் நடிக்க உள்ளார் என செய்திகள் வெளியாகி வந்தது. அதைத்தொடர்ந்து நடிகை பூஜா ஹெக்டே இப்படத்தில் ஸ்பெஷல் பாடல் ஒன்றுக்கு நடனமாடுகிறார் என தகவல் கசிந்தது. அதன்படி தற்போது இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பையும் படக்குழு வெளியிட்டுள்ளது.
கடந்த 2023ல் ரஜினி நடிப்பில் வெளியான ஜெயிலர் திரைப்படத்தில் தமன்னா நடனமாடியிருந்த காவாலா பாடல் பட்டி தொட்டி எங்கும் பட்டைய கிளப்பிய நிலையில் கூலி திரைப்படத்தில் பூஜா ஹெக்டே நடனமாடும் பாடலும் ட்ரெண்டாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.