ARTICLE AD BOX
கூலி படத்தில் இணைந்த பிரபல நடிகை.. அதிகாரப்பூர்வமாக அறிவித்த தயாரிப்பு நிறுவனம்!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் கூலி படத்தின் சில மாதங்கள் ஐதராபாத்தில் செட் அமைத்துப் படமாக்கப்பட்டது. லோகேஷ் கனகராஜ் இயக்கும் இந்த படத்துக்கு அனிருத் இசையமைக்க, அன்பறிவ் சண்டைக் காட்சிகளை இயக்க, கிரிஷ் கங்காதரன் ஒளிப்பதிவாளராக பணியாற்றுகிறார். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.
இந்த படம் ஒரு மல்டி ஸ்டார் படமாக உருவாகி வருவதால் பல முன்னணி நடிகர்கள் நடிக்கின்றனர். சத்யராஜ், நாகார்ஜுனா, ஸ்ருதிஹாசன் மற்றும் உபேந்திரா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். தற்போது ஷூட்டிங் ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் நடந்தது. அடுத்த கட்ட ஷூட்டிங் தற்போது சென்னை எண்ணூர் துறைமுகத்தில் நடந்து வருகிறது. விரைவில் மொத்த ஷூட்டிங்கும் நிறைவடைய உள்ளதாக சொல்லப்படுகிறது.
இந்த படத்தில் ஒரு துள்ளாட்ட பாடலுக்கு பூஜா ஹெக்டே நடனமாடியுள்ளதாக தகவல்கள் வெளியாகின. இந்நிலையில் தற்போது அதை சன் பிக்சர்ஸ் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.