ARTICLE AD BOX

Coolie release: லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினி நடித்து வரும் திரைப்படம்தான் கூலி. லோகேஷ் இயக்கும் படம் என்றாலே ரசிகர்களிடம் தாறுமாறான எதிர்ப்பு இருக்கிறது. ஏனெனில், மாநாகரம், கைதி, விக்ரம், மாஸ்டர், லியோ என அவர் இயக்கிய படங்கள் அப்படி. கமல், விஜய் ஆகியோரை இயக்கிவிட்டு இப்போது ரஜினியை இயக்கி முடித்திருக்கிறார்.
லோகேஷோடு ரஜினி இணைந்திருப்பதால் எதிர்ப்பு எக்கச்சக்கமாக எகிறியிருக்கிறது. சில வருடங்களுக்கு முன்பே கமலின் ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்க ரஜினி நடிப்பதாக ஒரு படம் பேசப்பட்டது. ஆனால், ரஜினி என்ன நினைத்தாரோ.. அப்போது பின் வாங்கிவிட்டார். எனவே, கமல் நடிக்க விக்ரம் படத்தை எடுத்தார் லோகேஷ்.

விக்ரம் படம் சூப்பர் ஹிட் அடித்து 600 கோடிக்கும் மேல் வசூல் செய்துவிட இப்போது லோகேஷ் இயக்கத்தில் நடிக்க ரஜினி ஒப்புக்கொண்டார். அப்படி ரஜினி நடித்து உருவான கூலி திரைப்படம் ஒரு பக்கா கேங்ஸ்டர் படமாக உருவாகியிருக்கிறது. பல வருடங்களுக்கு பின் ரஜினி நடித்துள்ள ஒரு படத்தில் சத்தியராஜ் நடித்திருக்கிறார். இதற்கு முன் பலமுறை ரஜினி நடிப்பில் நடிக்க வந்த வாய்ப்பை மறுத்த சத்தியராஜ் இந்த முறை ஒப்புக்கொண்டிருக்கிறார்.
இது ஒரு பேன் இண்டியா படம் என்பதால் தெலுங்கிலிருந்து நாகார்ஜுனா, கன்னடத்திலிருந்து உபேந்திரா, மலையாளத்திலிருந்து சௌபின் சாஹிர் போன்ற நடிகர்களை இந்த படத்தில் இறக்கியிருக்கிறார்கள். இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்திருக்கிறார். சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ள இந்த படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்திருக்கிறது.
இது தொடர்பான புகைப்படங்களையும் சன் பிக்சர்ஸ் நிறுவனம் வெளியிட்டது. இந்த படத்தை வருகிற ஆகஸ்டு 14ம் தேதி வெளியிட படக்குழு திட்டமிட்டிருக்கிறது. ஏனெனில், தொடர் விடுமுறை காரணமாக பல நாட்கள் விடுமுறை வருகிறது. பொதுவாக ரஜினி படம் வெளியாகும் போது தமிழில் எந்த பெரிய நடிகரின் படமும் வெளியாகாது.

ஆனால், இந்த முறை பாலிவுட் நடிகர் ஹிரித்திக் ரோஷனும், ஜூனியர் என்.டி.ஆரும் இணைந்து நடித்துள்ள War 2 என்கிற படமும் ஆகஸ்டு 14ம் தேதி வெளியாகவுள்ளது. இதுவும் பேன் இண்டியா படம் என்பதாலும், ஜூனியர் என்.டி.ஆர் தெலுங்கில் முக்கிய நடிகர் என்பதாலும் ஆந்திராவில் அதிக தியேட்டர்களில் இப்படம் வெளியாகும். அப்படி வெளியானால் கூலி படத்திற்கு ஆந்திராவில் அதிக தியேட்டர்கள் கிடைக்காது. எனவே, கூலி படத்தின் ரிலீஸ் தேதி தள்ளிப்போகுமா என்பது தெரியவில்லை.