ARTICLE AD BOX

மார்ச் மாத இறுதியில் 4 நாட்கள் தொடர்ச்சியாக விடுமுறை கிடைக்கவுள்ளது. மார்ச் 29 (சனிக்கிழமை), மார்ச் 30 (ஞாயிற்றுக்கிழமை), மார்ச் 31 (திங்கட்கிழமை – ரம்ஜான் பண்டிகை) மற்றும் ஏப்ரல் 1 (வங்கி கணக்கு முடிப்பு நாள் என்பதால் சில நிறுவனங்களுக்கு விடுமுறை) என்பதால், அரசு ஊழியர்கள் மற்றும் சில தனியார் நிறுவன ஊழியர்களுக்கு தொடர்ந்து 4 நாட்கள் விடுமுறை கிடைக்கும் வாய்ப்பு உள்ளது. இந்த விடுமுறை வெளியே சுற்றி பார்க்க, உறவினர்களை சந்திக்க, அல்லது வீட்டில் ஓய்வெடுக்க தயாராக உள்ள அனைவருக்கும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அதிக வெப்பத்தால் பகலில் நடமாட்டம் குறைந்து, மக்கள் குளிர்ச்சியான இடங்களை நோக்கி செல்லத் திட்டமிட்டு வருகின்றனர். அரசு மற்றும் சிபிஎஸ்சி பள்ளி மாணவர்களுக்கான ஆண்டு இறுதி தேர்வுகள் நிறைவடைய உள்ள நிலையில், குடும்பங்கள் பலரும் முன்கூட்டியே ஊட்டி, கொடைக்கானல் போன்ற சுற்றுலா தலங்களுக்கு செல்ல தயாராக உள்ளனர். தொடர்ச்சியாக 3-4 நாட்கள் விடுமுறை கிடைப்பதால், அரசு ஊழியர்கள் மற்றும் தனியார் பணியாளர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.