ARTICLE AD BOX
ரேஷன் கடை ஊழியர்களுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகம் முழுவதும் 39 மாவட்டங்களில் 34793 ரேஷன் கடைகள் உள்ளன. 2 கோடியே 24 லட்சத்து 13 ஆயிரத்து 674 ரேஷன் கார்டுகள் உள்ளன. ரேஷன் கடைகளில் வழக்கமாக மாதத்தின் இறுதி நாளில் பொருள்கள் விநியோகிக்கப்படாது. வழக்கமாக வெள்ளிக்கிழமைகளில் ரேஷன் கடைகளுக்கு விடுமுறை அளிக்கப்படும்.
பொங்கல் பண்டிகையையொட்டி ரேஷன் கடைகளுக்கு தமிழக அரசு விடுமுறை அளிக்கவில்லை. அரசு அறிவித்தது போல ரேஷன் கடைகள் திறக்கப்பட்டது. அதற்கு ஈடாக இன்று ரேஷன் கடைகளுக்கு விடுமுறை அளித்து தமிழக அரசு அறிவித்துள்ளது.
மாநிலம் முழுவதும் அனைத்து ரேஷன் கடைகளுக்கும் இன்று விடுமுறையாகும். பொங்கல் தொகுப்பு வழங்குவதற்காக கடந்த மாதம் 10-ம் தேதி விடுமுறை நாளில் பணி செய்ததற்காக, ரேஷன் கடை ஊழியர்களுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால், பொதுமக்கள் யாரும் இன்று ரேஷன் கடைகளுக்கு பொருட்கள் வாங்கச் சென்று ஏமாற வேண்டாம். அடுத்த வாரம் ரேஷன் கடைகள் திறக்கும் பொழுது பொருட்களை வாங்கிக் கொள்ளலாம்.
The post குஷி…! தமிழகம் முழுவதும் இன்று ரேஷன் கடை ஊழியர்களுக்கு விடுமுறை அறிவிப்பு…! appeared first on 1NEWSNATION - Tamil News Online | Latest News in Tamil | Breaking News Tamil | Tamil News Live | தமிழ் நியூஸ் | Tamilnadu News.