ARTICLE AD BOX
Almonds For Kids' Health : குழந்தைக்கு ஆரோக்கியமான முறையில் எடை அதிகரிக்க பாதாமை எப்படி கொடுக்க வேண்டும் என்று இங்கு காணலாம்.

கர்ப்ப காலத்தில் குழந்தைகளில் வளர்ச்சியில் ஏற்படும் பிரச்சனைகள், ஊட்டச்சத்து குறைபாடு, குறைபிரசவம், அல்லது தாய்ப்பால் கொடுக்காமல் இருப்பது போன்ற பல காரணங்களால் குழந்தைகளின் எடை குறைவாக இருக்கும். இதன் காரணமாக அவர்களது உடல் பலவீனமாக இருக்கும். எடை குறைவாக இருந்தால் குழந்தைகள் சரியாக வளர முடியாமல் போகும். மேலும் நோய் எதிர்ப்பு சக்தியும் குறைந்து அடிக்கடி நோய்வாய்ப்படுவார்கள். எனவே குழந்தைகளின் உடல் மற்றும் மன வளர்ச்சி சரியாக இருக்கவும், குழந்தையின் எடையை ஆரோக்கியமாக பராமரிப்பது ரொம்பவே முக்கியம். இத்தகைய சூழ்நிலையில், உங்கள் குழந்தையின் எடை ரொம்பவே குறைவாக இருந்தால், நீங்கள் ஆரோக்கியமான முறையில் அதிகரிக்க விரும்பினால், உங்கள் குழந்தையின் நினைவில் பாதாம் சேர்த்துக் கொள்ளுங்கள்.

பாதாமில் நார்ச்சத்து புரதச்சத்து கால்சியம் போன்ற ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன அவை குழந்தைகளின் குழந்தைகளின் எடையை ஆரோக்கியமான முறையில் அதிகரிக்கவும், பல்வேறு ஆரோக்கிய நன்மைகளை வழங்கவும் உதவுகிறது. இப்போது குழந்தைக்கு ஆரோக்கியமான முறையில் எடை அதிகரிக்க பாதாமை எப்படி கொடுக்க வேண்டும் என்றும், அதனால் கிடைக்கும் நன்மைகள் என்னென்ன என்றும் இந்த பதிவை தெரிந்து கொள்ளலாம்.
இதையும் படிங்க: பெரியவர்களை போல 'குழந்தைகள்' தலையணை வைத்து தூங்கலாமா? முக்கிய தகவல்

இரவில் 2-3 பாதாமை தண்ணீரில் ஊற வைத்து விடுங்கள் பிறகு மறுநாள் அதன் தோலை நீக்கி அரைத்துக் கொள்ளுங்கள். இப்போது அரைத்த அந்த பேஸ்டுடன் சிறிதளவு தண்ணீர் அல்லது பால் சேர்த்து நன்றாக கலந்து அதை குழந்தைக்கு தினமும் காலை வெறும் வயிற்றில் கொடுக்க வேண்டும்.
இதையும் படிங்க: குழந்தை பிறந்து 6 மாதம் வரை 'தண்ணீர்' கொடுக்காதீங்க.. பலர் தெரியாமல் செய்யும் தவறு!!

எடையை அதிகரிக்கும் : பாதாம் குழந்தைகளின் எடையை அதிகரிக்க உதவுகிறது. அதாவது இதில் ஆரோக்கியமான கொழுப்புகள் மற்றும் கலோரிகள் விரைந்துள்ளன அவை குழந்தைகளின் எடையை அதிகரிக்க உதவுகின்றன.
செரிமானத்தை மேம்படுத்தும் : பாதாமில் அதிக அளவு நார்ச்சத்து இருப்பதால் இது குழந்தைகளின் செரிமான அமைப்பை மேம்படுத்த உதவுகின்றது.
நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் : பாதாமில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் மற்றும் பல வைட்டமின்கள் நிறைந்துள்ளன. அவை குழந்தைகளின் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்து, தொற்று நோய்கள் ஏற்படாமல் தடுக்க உதவும்.

எலும்புகளை பலப்படுத்தும் : பாதாமில் கால்சியம் மற்றும் மெக்னீசியம் அதிக அளவு உள்ளதால், அவை குழந்தைகளின் எலும்புகளை பலப்படுத்தும்.
மூளை ஆரோக்கியத்திற்கு நல்லது : பாதாமில் குழந்தைகளின் மூளை வளர்ச்சிக்கு தேவையான கொழுப்பு அமிலங்கள் மற்றும் ஊட்டச்சத்துக்கள் உள்ளன. அவை குழந்தைகளின் மூளையை ஆரோக்கியமாக வைக்க உதவும்.
குறிப்பு : மருத்துவரிடம் ஆலோசனை கேட்காமல் குழந்தைகளுக்கு பாதாம் கொடுக்க வேண்டாம் என்பது நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.