ARTICLE AD BOX

இங்கிலாந்து நாட்டில் மலைகா ராஜா என்ற பெண் வசித்து வருகிறார். இவர் சமீபத்தில் கோடீஸ்வரர் ஒருவரை திருமணம் செய்து கொண்டு துபாயில் வசித்து வருகின்றனர். இந்நிலையில் திருமணத்திற்கு முன்பே, மலைகா ராஜா தனது கணவரிடம் குழந்தை பெற்றுக் கொள்ள வேண்டும் என்றால், தனக்கு சரியான ‘பொருளாதார பாதுகாப்பு’ கிடைத்தால் மட்டுமே அது நடக்கும் என்று கூறியுள்ளார். இதற்கு அவரது கணவரும் ஒப்புக்கொண்டு உள்ளார். இந்நிலையில் மலைகா கூறியது போல, 2-வது குழந்தையை பெற்றுக் கொள்வதற்காக தனது கணவரிடம் ரூ. 33 கோடி வாங்கிய பிறகு, சம்மதம் தெரிவித்தார். அந்த பணத்தை வைத்து கோடீஸ்வர வாழ்க்கைக்கு தேவையான பொருள்களை வாங்குவதற்காக பயன்படுத்தியதாகவும் கூறியுள்ளார்.
அந்த தொகையை பயன்படுத்தி அவர், ரூ.15 கோடி மதிப்புள்ள சொகுசு வீடு, தனது மகளுக்காக பிங்க் ஜி வேகன் கார், ரூ.86 லட்சம் மதிப்புள்ள 8 பிராண்டுகளில் கைப்பைகள், ரூ. 70 லட்சம் மதிப்புள்ள நகைகள், தனது மகனுக்காக உயர்தர பிராண்டுகளில் உடைகள், பிறப்புக்கு பிந்தைய பராமரிப்புக்காக ரூ.70 லட்சம் செலவிட்டதாக கூறப்படுகிறது. இச்சம்பவம் சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. இதற்கு முன்பு துபாயில் வசிக்கும் மற்றொரு கோடீஸ்வர மனைவி லிண்டா ஆண்ட்ரேட், குழந்தை பெற்றுக்கொள்ள தனது கணவரிடம் இருந்து 9 கேரட் வைர மோதிரம் கேட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.