குலதெய்வத்தை ஏன் வழிபட வேண்டும்? - மகா பெரியவர் தரும் விளக்கம்...

1 day ago
ARTICLE AD BOX

குலதெய்வ வழிபாடு - குலதெய்வத்தை ஏன் வழிபட வேண்டும்? - எப்படி வழிபட வேண்டும்? - அதனால் என்ன பலன்? - மகா பெரியவர் தரும் விளக்கம்...

" இந்துக்களுக்கு பல தெய்வங்கள் இருக்கின்றன. சிலர் சிவனையும் சிலர் விஷ்ணுவையும் சிலர் சக்தியையும் சிலர் முருகப்பெருமானையும் சிலர் விநாயகரையும் வழிபடுவர். இதைத் தாண்டி கண்ணுக்குத் தெரிந்த கடவுளாக விளங்கும் சூரியனை வழிபடுபவர்களும் உண்டு.

இந்த ஆறு பிரிவினரையும் ஒருங்கிணைத்தே ஆதிசங்கர் சனாதான தர்மத்தை உருவாக்கினார்.

இவை யாவற்றையும் விட உயர்வானது உன்னதமானது குலதெய்வ வழிபாடு. குலதெய்வம் என்பது நம் குலத்தை அதாவது நமது பரம்பரையை குறிப்பதாகும்.

நமக்கு முன்பிறந்த அனைவருமே முன்னோர்கள்தான். ஆனால் நமக்குரிய முன்னோர்கள், நம் தந்தைவழி பாட்டன் பாட்டிமார்கள்தான். இந்தத் தந்தைவழி பாட்டன்மார் வரிசையில், மிகப்பெரிய ஒழுங்கு ஒன்று இருப்பதை கூர்ந்து கவனித்தால் உணரலாம். அதுதான் ‘கோத்திரம்’ என்னும் ஒரு ரிஷியின் வழிவழிப் பாதை.

இதையும் படியுங்கள்:
"எனக்கு இன்ஸ்பிரேஷனே இந்த தமிழ் நடிகர் தான்": ராக்கி பாய் சொன்னது யாரை?
Kuladeivam

பிற கோத்திரத்தில் இருந்து பெண்கள் வந்து இந்த வழிவழிப் பாதையில் நம் தாத்தாக்களின் வாழ்க்கைத் துணையாகக் கைப்பிடித்திருப்பார்கள். எக்காரணம் கொண்டும் ஒரே கோத்திரத்தில் பெண் சம்பந்தம் ஏற்பட்டிருக்காது. இதனால், ரிஷி பரம்பரையானது சங்கிலிக் கண்ணி போல அறுபடாமல், வந்த வண்ணம் இருக்கும்.

அடுத்து, இவர்களின் நட்சத்திரம், உடலமைப்பு, குணங்கள் வேறாக இருக்கும். ஆனால் கோத்திர வழி மாறாது.

நம் குலதெய்வத்தின் சான்னித்தியத்தில் கைகூப்பி நின்றிருப்பார்கள். தலைமுடி காணிக்கைக் கொடுத்திருப்பார்கள். காது குத்தும் செயல்பாடுகளும் நடந்திருக்கும்.

இவ்வுலகில் உள்ள பல கோயில்களுக்கு அவர்கள் சென்றிருக்கலாம். ஆனால், குலதெய்வக் கோயிலுக்கு, நாம் பக்தி என்கிற ஒன்றை அறிவதற்கு முன்பே, நம் தாய் தந்தையரால் அங்கு கொண்டு செல்லப்பட்டு, வணங்க வைக்கப் பட்டிருப்போம்.

இதன்படி பார்த்தால், குலதெய்வ சன்னிதியில் சென்று நாம் நிற்கும் போது, நம் பரம்பரை வரிசையில் போய் நிற்கிறோம். இந்த வரிசைத் தொடர்பை வேறு எந்த தெய்வத்தாலும் உருவாக்க முடியாது.

இதையும் படியுங்கள்:
சரும புற்றுநோயை வராமல் தடுக்கும் உணவுகள்..!
Kuladeivam

அது மட்டுமல்ல. ஒரு மனிதனின் பிறப்புக்குப் பின்னே இப்படியொரு பரம்பரை வரிசை இருப்பதை நினைக்கக் தெரியாமல், அதிகபட்சம் இரு பாட்டன் பாட்டி பெயருக்கு மேல் தெரியாமல் பெரும்பாலோரின் வாழ்க்கைப் போக்கு உள்ளது.

ஒவ்வொரு குடும்பத்திற்கும் அந்த இறைசக்தி குலதெய்வமாக, அவர்களுக்கான ஒரு பெயரில் வெளிப்படுகிறது. இல்லையில்லை வெளிப்பட, வழிவகை செய்யப்பட்டது! அதுவும் நம் முன்னோர்களால்! அவர்கள் யார்? நம்முடைய தொடக்கங்கள்… நாம் யார்? அந்தத் தொடக்கத்தின் தொடர்ச்சி! மொத்தத்தில், நாம் வேறு அவர்கள் வேறு இல்லை.

இந்த வழிவழிப் போக்கில் ஒருவர் மூட்டை மூட்டையாகப் புண்ணியத்தைக் கட்டியிருக்கலாம். இன்னொருவர் பாவம் பண்ணியிருக்கலாம்! நாம் அங்கே போய் நின்று நம் பொருட்டு பிரத்யேகமாக வெளிப்படும் அந்த இறைசக்தியைத் தொழும் போது, அவர்களும் பித்ருக்களாக விண்ணில் இருந்து பார்க்கிறார்கள்.

நாமும் ஆசீர்வதிக்கப்படுகிறோம்.

இது எத்தனை தூரப் பார்வையோடு, வடிவமைக்கப்பட்ட ஒரு விஷயம்? ஆகவே குலதெய்வத்தை வழிபடுங்கள்."

- மகா பெரியவர்.

Read Entire Article