குறை கூறாத நாயே இல்ல… மணிமேகலைக்கு சப்போர்ட் செய்த பிரபலம்… அடி செமையா விழுதே!

6 hours ago
ARTICLE AD BOX

Manimegalai: பிரபல தொலைக்காட்சி தொகுப்பாளர் மணிமேகலைக்கு எதிராக பல பிரபலங்கள் பேசி வந்த நிலையில் முதல் முறையாக அவருக்கு ஆதரவாக ஒரு பிரபலம் வெளிப்படையாக பேசியிருக்கும் வீடியோ வைரலாகி வருகிறது.

சன் டிவியில் தொகுப்பாளராக இருந்தவர் மணிமேகலை. அவர் உசேன் என்ற நடன கலைஞரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். அதைத் தொடர்ந்து மணிமேகலை விஜய் தொலைக்காட்சியில் மிஸ்டர் அண்ட் மிஸஸ் சின்னத்திரை நிகழ்ச்சியில் கலந்து கொண்டு வரவேற்பை பெற்றார். அதை தொடர்ந்து குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கோமாளியாக உள்ளே வந்தார்.

அதை தொடர்ந்து அவருக்கு விஜய் தொலைக்காட்சிகள் நல்ல வரவேற்பு கிடைத்தது. பல சீசன்கள் தொகுத்து வழங்கி வந்தவர் கடந்த சீசனில் தொகுப்பாளராக அறிமுகமானார். ஆனால் அதிலும் பாதியிலிருந்து வெளியேறி உள்ளே போட்டியாளராக இருக்கும் பிரபல தொகுப்பாளர் ஒருவர் தன்னை வேலை செய்ய விடாமல் தடுப்பதாக குற்றச்சாட்டை முன் வைத்தார்.

மணிமேகலை விஜே பிரியங்காவை தான் சொல்வதாக பலருக்கும் தெரிந்து அவருக்கு ரசிகர்கள் ஆதரவு தெரிவித்தனர். ஆனால் அங்கிருந்த பிரபலங்கள் எல்லோருமே விஜய் தொலைக்காட்சியின் முக்கிய முகமாக இருந்த பிரியங்காவிற்கு தான் தங்களுடைய ஆதரவை தெரிவித்து வந்தனர். இதனால் தற்போது விஜய் டிவியில் இருந்து விலகி ஜீ தமிழில் நடன நிகழ்ச்சிக்கு தொகுப்பாளராக இருக்கிறார் மணிமேகலை. 

 

நேற்றைய நிகழ்ச்சியில் ஒரு போட்டியாளர் கஷ்டத்தை பார்த்த மணிமேகலை, காமெடியில் நான் போன போது இவங்களுக்கு பெர்பாமன்ஸ் செய்வாங்களா என கலாய்த்தனர். இப்போ இவங்களுக்கு நடிக்க தெரியும். ஆங்கரிங் தெரியுமா எனக் கேட்டனர்.

நம்மளுக்கு தெரியாதுனு சொன்ன விஷயத்தையே மாற்றி காட்டினேன். திரும்ப திரும்ப அத டிரை பண்ணா மக்களை நம்மளை அதுபோல நினைக்க வைக்க முடியும் எனக் கலங்கி பேசினார். உடனே அந்த நிகழ்ச்சியின் நடுவராக இருந்த பாபா பாஸ்கர் இறங்கி வந்து, இவளுக்கு நிறைய கஷ்டம் இருக்கு.

ரொம்ப நல்ல பொண்ணு. இவங்களோட நல்லா பேசுவாங்க. கொஞ்சுவாங்க. ஆனா பின்னாடி பேசுவாங்க. இங்க தான் தலைவர் ஒன்னு சொல்லி இருக்காரு. குலைக்காத நாயும் இல்ல. குறை கூறாத வாயும் இல்ல எனக் கூறி பேசி இருக்கிறார் பாபா பாஸ்கர்.

Read Entire Article