குருப்பெயர்ச்சி: மகர ராசிக்கு தொழிலில் வெற்றி, புகழ்.. கோடீஸ்வரராகும் யோகம்.. பணமழை கொட்டும்

6 hours ago
ARTICLE AD BOX

குருப்பெயர்ச்சி: மகர ராசிக்கு தொழிலில் வெற்றி, புகழ்.. கோடீஸ்வரராகும் யோகம்.. பணமழை கொட்டும்

Astrology
oi-Pavithra Mani
Subscribe to Oneindia Tamil

குருப்பெயர்ச்சி: 2025 ஆம் ஆண்டுக்கான குருப்பெயர்ச்சி மே 14 ஆம் தேதி நடைபெறவுள்ளது. இந்த குருப்பெயர்ச்சியில் மகரம் ராசிக்காரர்களுக்கான பலன்கள், பரிகாரங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் விரிவாகப் பார்க்கலாம்.

குரு சுபத்துவம் பொருந்திய கிரகம். 2025 ஆம் ஆண்டில் குருப்பெயர்ச்சி மே 14 ஆம் தேதி ஆரம்பமாகிறது. திருக்கணிதப்படி இரவு 10.30 குருப்பெயர்ச்சி நடக்கிறது. 2025 ஆம் ஆண்டு மே மாதம் ரிஷபத்தில் இருந்து மிதுனத்துக்குப் பெயர்ச்சி ஆகிறார். அங்கிருந்து குருவின் பார்வை துலாம், தனுசு, கும்பம் ராசியின் மேல் விழுகிறது. குரு பார்த்தால் கோடி நன்மை என்று கூறுவார்கள். அந்த வகையில் இந்த குருப்பெயர்ச்சியில் மகரம் ராசிக்காரர்களுக்கு என்ன விதமான பலன்களை அனுபவிக்கப் போகின்றனர் என்பது குறித்து தெரிந்து கொள்ளலாம்.

Guru peyarchi Magaram

மகரம்: மகரம் ராசிக்காரர்களுக்கு குருப்பெயர்ச்சியில் அருமையான காலகட்டமாக இருக்கும். இதுநாள் வரை ராசி, லக்னத்தில் குரு பார்வை இருந்து வந்தது. ஆனாலும், கேது 9 ஆம் இடத்தில் இருந்ததால் நிறைய பிரச்சனைகளை சந்தித்து வந்திருப்பார்கள். 2 ஆம் இடத்தில் ராகு வந்து அமர்வதால் பேச்சில் மிகவும் கவனமா இருக்க வேண்டும். வைட்டமின் குறைபாடுகள் ஏற்படுவதற்கான வாய்ப்புள்ளது. கண் சார்ந்த பிரச்சனைகள், பல் புதிதாக வைப்பது, மூக்கு துவாரங்களில் ஏற்படும் பிரச்சனைகளை சரிசெய்வதற்கான வாய்ப்பு ஏற்படும்.

ராகு 2 ஆம் இடத்தில் இருந்தால் கணவன் அல்லது மனைவிக்கு அறுவை சிகிச்சை செய்ய வேண்டிய சூழல் ஏற்படும். குரு பார்வை இருப்பதால் பெரிய பாதிப்புகள் ஏற்படாது. உங்களுடைய நன்மைக்காகத்தான் செய்வீர்கள். விரைய ஸ்தானத்துக்கும், 2 ஆம் இடத்துக்கும் குரு பார்வை இருப்பதால் நல்ல தூக்கம் வரும். ஆன்மீகத்தில் நாட்டம் அதிகரிக்கும். வேண்டக்கூடிய விஷயங்கள் பழிக்கும்.

ஜாதகத்தில் குரு பார்வை இல்லையென்றால் நல்லது நடக்காது. விரைய ஸ்தானத்தில் 12 ஆம் இடத்தில் குரு பார்வை இருப்பதால் உங்களுக்கு தெய்வ அனுக்கிரகம் உண்டாகும். வெளியூருக்கு சென்று சிட்டிசன் சிப் வாங்குவது, வழக்குகள் சாதகமாக முடியும் யோகம் உண்டாகும். 10 ஆம் இடத்தில் குரு பார்வை இருப்பதால் தொழிலில் வெற்றி, புகழ் உண்டாகும். உங்களுக்கு புதிய புரோஜக்ட்கள் கிடைக்கும்.

6 ஆம் இடத்தில் குரு இருப்பதால் கேஸ்ட்ரோ பிரச்சனைகள் உண்டாகும். நிறைய அகத்திக்கீரை, முருங்கை கீரை எடுப்பது நல்லது. தேனும், நெய்யும் உடலில் சேர்ப்பதால் வாயு தொல்லைகள் நீங்கும். அடிமைத் தொழிலில் இருப்பவர்களுக்கு பிரச்சனை உண்டாகும். உத்தியோகத்தில் மாற்றம் உண்டாகும். தொழிலில் இருக்கக்கூடிய புரோஜகட், ஃபைல்ஸ் மாறுவதற்கான வாய்ப்புள்ளது.

மகர ராசியினருக்கு சில விஷயங்களை விட்டுக் கொடுப்பது நல்லது. மனைவியின் உடல்நிலை, கணவன் உடல்நிலையைப் பார்த்துக் கொள்வது நல்லது. காரணம் ராகு, 6 ஆம் இடத்தில் குரு இருப்பதால் மருத்துவ செலவு அடுத்த ஒரு வருடத்தில் ஏற்படுவதற்கான வாய்ப்புள்ளது. இதனைத் தடுக்க பவமான சுத்த ஹோமம் வீட்டில் செய்வது நல்ல பலன்களைத் தரும். மிருத்யுங்க ஜெபத்தை சொல்லிக் கொண்டிருப்பதும் ஏற்றத்தைக் கொடுக்கும்.

மகர ராசியைப் பொருத்தவரை பொருளாதாரத்தை ஒட்டி நிறைய நல்ல விஷயங்கள் நடக்கும். போட்டித் தேர்வுகளை எழுதுபவர்களுக்கு கண்டிப்பாக ஜெயிப்பார்கள். புதிய கடன்களை வாங்கி ஒரு பிரச்சனையை முடிப்பீர்கள். அதிக வட்டிக்கு வாங்கிய கடன், நோயிலிருந்து விடுபடுவீர்கள்.

சந்தோஷ ரீதியாக 100க்கு 65 சதவீதம் நன்றாக இருக்கும், பொருளாதாரத்தில் 95 சதவீதமான ஏற்றம் உண்டாகும். மகிழ்ச்சி, நிம்மதி உண்டாகும் அமோகமான காலகட்டமாக இருக்கும்.

செய்ய வேண்டிய பரிகாரங்கள் என்ன?:- பவமானசுத்த ஹோமம் வீட்டில் செய்வது நல்ல பலன்களைத் தரும். மிருத்யுங்க ஜெபத்தை சொல்லிக் கொண்டிருப்பதும் உங்களுக்கு ஏற்றத்தைக் கொடுக்கும்.

More From
Prev
Next
English summary
The Guru Peyarchi will take place on May 14. This astrology article will take a detailed look at the benefits and remedies for Magaram people during this Guru Peyarchi.
Read Entire Article