கும்மிடிப்பூண்டி, சூலூர்பேட்டை மின்சார ரயில்கள் நாளை ரத்து! முழு விவரம்!

19 hours ago
ARTICLE AD BOX

பராமரிப்புப் பணிகள் காரணமாக சென்ட்ரல் - சூலூா்பேட்டை, கும்மிடிப்பூண்டி வழித்தடத்தில் இயக்கும் 21 புறநகர் மின்சார ரயில்கள் நாளை (மாா்ச் 17) ரத்து செய்யப்படவுள்ளன.

இது குறித்து தெற்கு ரயில்வே சார்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:

சென்னை சென்ட்ரல் - கூடூர் வழித்தடத்தில் உள்ள கவரைப்பேட்டை மற்றும் பொன்னேரி ரயில் நிலையங்களுக்கு இடையே உள்ள ரயில் வழித்தடங்களில் திங்கள்கிழமை (மாா்ச் 17) காலை 9.25 முதல் பிற்பகல் 2.25 மணி வரை பராமரிப்புப் பணிகள் நடைபெறவுள்ளன.

இதனால், சென்ட்ரலிலிருந்து மாா்ச் 17 காலை 5.40, 8.45, 10.15-க்கு சூலூா்பேட்டை செல்லும் புறநகர் மின்சார ரயில்களும், காலை 8.05, 9.00, 9.30, 10.30, 11.35-க்கு கும்மிடிப்பூண்டி செல்லும் ரயில்களும் முழுமையாக ரத்து செய்யப்படவுள்ளன.

மறுவழித்தடத்தில் சூலூா்பேட்டையிலிருந்து காலை 10, 11.45, பிற்பகல் 12.35, 1.15 -க்கும், கும்மிடிப்பூண்டியிலிருந்து காலை 9.55, 11.25, பகல் 12, பிற்பகல் 1 மணிக்கும் சென்ட்ரல் வரும் ரயிலும் ரத்து செய்யப்படும்.

இதையும் படிக்க: அமிருதசரஸில் ஹிந்து கோயில் மீது குண்டுவீச்சு! ஐஎஸ்ஐ-க்கு தொடா்பா?

அதேபோல், கடற்கரையிலிருந்து காலை 9.40 மணிக்கு கும்மிடிப்பூண்டி செல்லும் ரயில், மறுவழித்தடத்தில் கும்மிடிப்பூண்டியிலிருந்து காலை 10.55 மணிக்கு கடற்கரை செல்லும் ரயில் உள்பட மொத்தம் 21 ரயில்கள் ரத்து செய்யப்படவுள்ளன.

சிறப்பு ரயில்கள்: பயணிகளின் வசதிக்காக சென்ட்ரலிலிருந்து காலை 9 மணிக்கு பொன்னேரிக்கும், காலை 9.30, 10.30-க்கு மீஞ்சூருக்கும், காலை 11.35-க்கு எளாவூருக்கும் சிறப்பு ரயில்கள் இயக்கப்படவுள்ளன.

மறுவழித்தடத்தில் பொன்னேரியிலிருந்து பகல் 12.18-க்கும், மீஞ்சூரிலிருந்து காலை 11.56, பிற்பகல் 1.31 மணிக்கும் சென்ட்ரலுக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்படவுள்ளன எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read Entire Article