கும்பமேளாவில் குளிக்கும் பெண்களின் ரகசிய வீடியோ விற்பனை.. அதிர்ச்சியில் போலீஸ்!

4 days ago
ARTICLE AD BOX

மகா கும்பமேளாவில் புனித நீராடும் பெண்களை சிலர் ரகசியமாக வீடியோ எடுத்து விற்பதாக அதிர்ச்சி தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. இந்த மாதிரியான வீடியோக்களை எடுத்து விற்பவர்களையும் அதை வாங்குபவர்களையும் கைது செய்வோம் என உத்தரப் பிரதேச காவல்துறை எச்சரித்துள்ளது.

பெண்கள் குளிக்கும் ரகசிய வீடியோ:

ஒவ்வொரு 12 ஆண்டுகளுக்கும் ஒருமுறை நடைபெறும் மகா கும்பமேளா, உத்தரபிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் தொடங்கி கோலாகலமாக நடைபெற்று வருகிறது. மகா கும்பமேளாவில் முறையான ஏற்பாடுகள் செய்யப்படவில்லை, வசதிகள் ஏற்படுத்தி தரப்படவில்லை என தொடர் குற்றச்சாட்டுகள் எழுந்து வருகின்றன. அதோடு, கும்பமேளாவில் மனித கழிவுகளால் பெரும் மாசு ஏற்பட்டிருப்பதாகவும் அதிர்ச்சி அறிக்கைகள் வெளியாகி வருகின்றன.

இந்த நிலையில், கும்பமேளாவில் புனித நீராடும் பெண்களை சிலர் வீடியோ எடுத்து விற்பதாகவும் சிலர் அதை வாங்குவதாகவும் உத்தரப் பிரதேச காவல்துறை தெரிவித்துள்ளது. இதுகுறித்து உ.பி. காவல்துறை வெளியிட்ட அறிக்கையில், "கும்பமேளாவில் பெண்கள் குளித்து உடை மாற்றும் வீடியோக்களை சில தளங்கள் பதிவேற்றுவதை உ.பி. சமூக ஊடக கண்காணிப்புக் குழு கண்டறிந்துள்ளது" என குறிப்பிடப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக மகா கும்பமேளா துணை ஆய்வாளர் (டிஐஜி) வைபவ் கிருஷ்ணா விரிவாக கூறுகையில், "நேற்று, சில சமூக ஊடக கணக்குகளில் சில குழுக்கள் உருவாக்கப்பட்டு, இதுபோன்ற சட்டவிரோத நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாக எங்களுக்குத் தெரியவந்தது.

உ.பி. போலீஸ் அதிரடி:

அவர்கள் மீது நாங்கள் வழக்குப் பதிவு செய்துள்ளோம். மேலும் இதுபோன்ற தவறான செயல்களில் ஈடுபட்ட அனைவரும் அடையாளம் காணப்படுகிறார்கள். இவை கிரிமினல் குற்றங்கள். இது ஐடி சட்டத்தின் கீழ் குற்றம்.

இதுபோன்ற வீடியோக்களை விற்பனை செய்பவர்களும் அவற்றை வாங்குபவர்களும் கைது செய்யப்படுவார்கள். எங்கள் சமூக ஊடகக் குழு தொடர்ந்து கண்காணித்து வருகிறது. இதுபோன்ற உள்ளடக்கத்தைப் பதிவேற்றுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்" என்றார்.

நேற்று ஒரு FIR பதிவு செய்தோம். டெலிகிராம் மற்றும் இன்ஸ்டாகிராமில் சில கணக்குகள் மீது FIR பதிவு செய்யப்பட்டுள்ளது. இப்போதும் கூட நாங்கள் அவர்களை கண்காணித்து வருகிறோம். நாங்கள் அவர்களை அடையாளம் கண்டு அவர்களுக்கு எதிராக FIR பதிவு செய்து வருகிறோம்.

இதுவரை 103 சமூக ஊடக கணக்குகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. அவற்றில் பீதியை பரப்பும் கணக்குகளும் உள்ளன. மேலும் மகா கும்பமேளாவில் இருந்து பெண்களின் தனிப்பட்ட வீடியோக்களை வெளியிடும் கணக்குகளும் உள்ளன" என்றார்.

Read Entire Article