குப்புறப்படுத்துத் தூங்குறீங்களா? அது நல்லதுதானா?

12 hours ago
ARTICLE AD BOX

குப்புறப்படுத்துத் தூங்குவது பெரும்பாலானோருக்கு பிடித்தமான ஒரு விஷயம். இப்படி தூங்கும்போது உடல்நலத்திற்கு பிரச்னைகள் ஏற்படுமா? பார்க்கலாம்...

தூக்கம் அனைவருக்குமே தேவையான அவசியமான ஒன்று. ஏனெனில் தூக்கத்தில்தான் உடல் தன்னைத்தானே சரிசெய்து கொண்டு அன்றாட வேலைகளுக்குத் தயாராகிறது.

தூங்கும்போது ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு நிலை சௌகரியமாக இருக்கும். ஏனெனில் படுத்தவுடன் வேண்டும் தூங்க வேண்டும், ஆழ்ந்த தூக்கம் வேண்டும் என்று ஒவ்வொருவரும் அதற்கேற்றபடி படுத்துத் தூங்குவார்கள்.

இடப்பக்கம் ஒருபுறமாக படுத்தல், வலதுபுறமாக திருப்பி படுத்தல், மேல்நோக்கி மல்லாக்கப் படுத்தல், தூங்கும்போது ஒவ்வொருவரும் கை, கால்களை வைத்திருக்கும் நிலை என மாறுபடும்.

இதையும் படிக்க | வெந்நீர் குடித்தால் தொப்பை குறையுமா?

இதில் குப்புறப்படுத்துத் தூங்குவது பெரும்பாலானோருக்கு பிடித்தமான ஒன்று. ஆனால் இது மிகவும் மோசமான தூக்க நிலை என்கின்றனர் நிபுணர்கள்.

குப்புறப்படுக்கும்போது உடலில் பல பிரச்னைகள் ஏற்படும் என்று எச்சரிக்கின்றனர்.

முதலில் கழுத்து, முதுகெலும்பு, இடுப்பு, கை, கால்களில் வலி ஏற்படும்.

இரவு உணவு சாப்பிட்டவுடன் குப்புறப்படுக்கும்போது வாந்தி, அசிடிட்டி போன்ற செரிமானப் பிரச்னைகள் ஏற்படலாம்.

உடலில் நுரையீரல் உள்ளிட்ட சில உறுப்புகளுக்கு ரத்த ஓட்டம் தடைபடுகிறது. இதயம் தொடர்பான பிரச்னைகளும் ஏற்படலாம்.

மேலும் சருமம் சுருங்குகிறது. இதனால் முக அழகு கெடுகிறது.

மூக்கு தலையணையில் அழுத்தப்பட்டு சுவாச சிக்கல்களுக்கு வழிவகுக்கும்.

எந்த பக்கம் தூங்க வேண்டும்?

இடதுபுறம் தூங்கும்போது நுரையீரல் பகுதி அழுத்தப்பட்டு சுவாசப் பிரச்னைகள் ஏற்படும். இதய அறுவை சிகிச்சை செய்துகொண்டவர்கள், இதயம் தொடர்பான பிரச்னைகள் உள்ளவர்கள் இடதுபக்கம் தூங்க வேண்டாமென்று நிபுணர்கள் பரிந்துரைக்கிறார்கள்.

இந்த ஆபத்துகளைக் குறைக்க தரையில் முதுகினை வைத்து முழங்கால்களுக்குக் கீழே தலையணையை வைத்து மல்லாக்கப் படுக்கலாம்.

இதையும் படிக்க | குழந்தை குண்டாக இருக்கிறதா? எச்சரிக்கும் மருத்துவர்கள்!

வலது பக்கத்தில் முழங்கால்களுக்கு இடையில் தலையணையை வைத்துத் தூங்குவதும் பரிந்துரைக்கப்படுகிறது.

இது முதுகெலும்பு சீரமைப்புக்கு உதவும், இதயம், நுரையீரலில் அழுத்தத்தைக் குறைக்கும், சுவாசத்தை மேம்படுத்தும்.

குப்புறப்படுப்பதையும் இடதுபுறம் படுப்பதையும் தவிர்க்க வேண்டும் என்று நிபுணர்கள் அறிவுறுத்துகின்றனர்.

Read Entire Article