குன்னூர் அழகையே மிஞ்சும் அளவிற்கு அதை சுற்றி இத்தனை மலை பிரதேசங்களா?

19 hours ago
ARTICLE AD BOX

ஊட்டிக்கு டிரிப் போனால் குன்னூருக்கு அவசியம் சென்று பார்த்து விட்டு வர வேண்டும். அத்தனை அழகான இடம் என்பார்கள். ஆனால் குன்னூரின் அழகையே தூக்கி சாப்பிடும் அளவிற்கு, மூச்சு முட்ட செய்யும் அளவிற்கு கொள்ளை அழகை கொண்டுள்ள 7 முக்கியமான மலை பிரதேசங்கள் குன்னூரை சுற்றி உள்ளன. அந்த இடங்கள் எவை என வாங்க தெரிந்து கொள்ளலாம்.

7 breathtaking hill stations near Coonoor

ஊட்டி

மலைகளின் ராணி என்று அழைக்கப்படும் ஊட்டி, நீலகிரி மலைகளின் ஒரு மலை வாசஸ்தலம் ஆகும்.இது இங்குள்ள தேயிலை தோட்டங்கள், ஏரிகள், தாவரவியல் பூங்காக்கள், வனவிலங்குகள் மற்றும் அழகான டாய் ட்ரெயின் சவாரிக்கு பிரபலமானது.

கோத்தகிரி

இயற்கையின் அழகு, தேயிலை தோட்டங்கள், அமைதியான சூழல் போன்ற சிறப்புகளுடன் உள்ள கோத்தகிரி, குன்னூருக்கு மிக அருகில் அமைந்துள்ள ஒரு மலை வாசஸ்தலம் ஆகும். இங்குள்ள தேயிலைத் தோட்டங்கள் மற்றும் பசுமையான சூழல்கள் வழியாக மலை ஏற்ற பாதைகள் உள்ளன. இவை இங்கு மிகவும் பிரபலமாகும். மேலும் இங்கு உள்ள கேத்தரின் நீர்வீழ்ச்சி 250 அடி உயரத்திலிருந்து விழும் இரட்டை அருவியாகும்.

7 breathtaking hill stations near Coonoor

வால்பாறை

வால்பாறை அடர்ந்த காடுகளால் சூழப்பட்ட ஒரு பகுதி ஆகும். இங்குள்ள தேயிலை தோட்டங்கள், நீர்வீழ்ச்சிகள், காடுகள் மற்றும் வனவிலங்குகள் இயற்கை ஆர்வலர்களுக்கும் சாகச அலுவலர்களுக்கும் ஏற்ற ஒரு பிரபலமான இடமாக உள்ளது. யானைகள் அதிகம் உலாவும் பகுதியாகவும் இது உள்ளது.

மூணாறு

கேரளாவின் புகழ்பெற்ற மலை வாசஸ்தலமான மூணாறு பரந்த தேயிலைத் தோட்டங்கள், மூடுபனி நிறைந்த நிலப்பரப்புகள், நீர்வீழ்ச்சிகள் மற்றும் இரவிகுளம் தேசிய பூங்கா ஆகியவற்றை கொண்டுள்ளது. 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை பூக்கும் அரிய தாவரமான நீலக்குறிஞ்சிப்பூ, மூணாறு மலைகளில் அதிகம் பூக்கும் பூவாகும். இதுவும் குன்னூருக்கு அருகிலேயே அமைந்துள்ளது.

7 breathtaking hill stations near Coonoor

கொடைக்கானல்

மலைகளின் இளவரசி என்று அழைக்கப்படும் கொடைக்கானல், அதன் அழகிய ஏரிகள் மற்றும் நீர்வீழ்ச்சிகளுக்கு பிரபலமானது. மேலும் இங்கு பிரமிக்க வைக்கும் பைன் காடுகள் உள்ளன.

ஏற்காடு

ஏற்காடு காபி தோட்டங்கள், அழகிய இயற்கை காட்சிகள் மற்றும் படகு சவாரிக்கு பிரபலமான எமரால்டு ஏரியுடன் கூடிய அமைதியான சுற்றுலா தளம் ஆகும்.

வைத்திரி

கேரளாவின் வயநாட்டில் அமைந்துள்ள வைத்திரி மலைக்காடு ரிசார்ட்டுகள், நீர்வீழ்ச்சிகள் மற்றும் மசாலா தோட்டங்களுடன் இயற்கை ஆர்வலர்களுக்கு ஏற்ற இடமாக உள்ளது.

இந்த ஏழு இடங்களும் ஒன்றுக்கு ஒன்று தொடர்பு இல்லாதது போல் தோன்றலாம். ஆனால் தமிழகத்தின் தென் மாவட்டங்களில் உள்ள மலை வாசஸ்தலங்களுக்கு சென்று சுற்றி பார்த்து விட்டு வர வேண்டும் என்பவர்களுக்கு இது ஒரு சிறந்த டூர் பேக்கேஜாக இருக்கும். இந்த இடங்கள் அனைத்தையுமே அதிகபட்சம் 3 முதல் 4 மணி நேரம் பயணத்திற்கு அடைந்து விடலாம். எங்கு திரும்பினாலும் இயற்கை அழகு, குளுமை, மலைகள், நீர்வீழ்ச்சிகள் என உற்சாகத்திற்கு பஞ்சமே இல்லாமல் நம்மை குதூகலிக்க வைத்து விடக் கூடியவை.

ஊட்டி, கொடைக்கானலில் அதிகமான சுற்றுலாப் பயணிகள் கூட்டம் வரும் என நினைப்பவர்கள் மற்ற இடங்களுக்கு சென்று விட்டு வரலாம். இங்கு கூட்டமம் குறைவாக இருப்பதுடன், அழகும் அளவில்லாமல் கொட்டி கிடக்கிறது.

Read more about: coonoor tamil nadu
Read Entire Article