ARTICLE AD BOX
தமிழ்நாடு மற்றும் கேரள எல்லையான கோவை சாவடி பகுதியில் விரைவில் மீடியா மற்றும் சினிமா தொடர்பான பயிற்சி அரங்கம் தொடங்க இருக்கிறது. இதற்கான ஹார்மனி கன்வென்ஷன் மையம் தொடக்க விழாவில் பிரபல மலையாள திரைப்பட இயக்குநர் சிபி மலையில் கலந்து கொண்டார்.
இதன் செய்தியாளர் சந்திப்பில் பங்கேற்ற அவர், "கேரள - தமிழக எல்லையில் இது போன்ற சினிமா தொடர்பான பயிற்சி மையங்கள் வருவது மலையாளம் மற்றும் தமிழ் சினிமா துறைகள் இணைந்து பணியாற்ற நல்ல வாய்ப்பாக இருக்கும்
தமிழ் சினிமாவிற்கும், எனக்கும் நீண்ட கால தொடர்பு இருக்கிறது. கமல் நடிப்பில் வெளியான குணா திரைப்படத்தை முதல் நான் தான் இயக்குவதாக இருந்தது. இளம் இயக்குநர்கள் நல்ல திரைப்படங்களை தருகின்றனர். குடும்ப பாங்கான திரைப்படங்களை கடந்து, தற்போது இளம்தலைமுறையினருக்கு பிடித்த படங்கள் மட்டுமே வெற்றி பெறுகிறது.
இந்திய அளவில் தென்னிந்திய படங்களுக்கு நல்ல வரவேற்பு கிடைக்கிறது. மம்முட்டியை வைத்து விரைவில் திரைப்படம் இயக்க இருக்கிறேன். மீண்டும் மோகன்லாலுடன் இணைந்து பணியாற்ற வேண்டுமென்றால் அதற்கான கதைக்களம் அமைய வேண்டும்" எனக் கூறினார்.
செய்தி - பி. ரஹ்மான்