குட் பேட் அக்லியில் திரிஷாவின் கேரக்டர்.. வெயிட்டான அப்டேட்டை இறக்கிய டீம்

1 day ago
ARTICLE AD BOX

Good Bad Ugly: பல வருடங்கள் கழித்து வெளியான அஜித்தின் விடாமுயற்சி எதிர்பார்த்த அளவுக்கு போகவில்லை. ஆனாலும் நல்ல விமர்சனங்கள் தான் கிடைத்தது.

அதைத்தொடர்ந்து ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அவர் நடித்து வரும் குட் பேட் அக்லி ஏப்ரல் 10 திரைக்கு வருகிறது. ஆனால் இன்னும் படத்திலிருந்து எதிர்பார்த்த அப்டேட் வரவில்லை.

இதனால் ரசிகர்கள் குழப்பத்தில் இருந்தனர். அதைத்தொடர்ந்து இன்று 7.03 மணிக்கு அப்டேட் வரும் என அறிவிக்கப்பட்டது. ஆனால் நேரம் கடந்ததே தவிர அப்டேட் எதுவும் வரவில்லை.

வெயிட்டான அப்டேட்டை இறக்கிய டீம்

அதை அடுத்து தொழில்நுட்ப கோளாறால் 8.02 மணிக்கு அப்டேட் வரும் என அறிவித்தார்கள். அதைத்தொடர்ந்து வெறித்தனமாக காத்திருந்த ரசிகர்களுக்கு தரமான ட்ரீட் கிடைத்துள்ளது.

அதன்படி இப்படத்தில் ஹீரோயின் ஆக நடித்து வரும் திரிஷாவின் கேரக்டர் பெயர் ரம்யா என அறிவிக்கப்பட்டுள்ளது.

அது மட்டும் இன்றி அடுத்த வாரம் முழுவதும் ஒவ்வொரு கதாபாத்திரங்களின் பெயரும் அறிவிக்கப்படும். அதை அடுத்து 28ஆம் தேதி டீசர் வெளியாகும் என தெரிகிறது.

Read Entire Article