ARTICLE AD BOX
சென்னை,
அஜித் நடிப்பில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் 'குட் பேட் அக்லி' . மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு இசையமைப்பாளர் ஜி.வி பிரகாஷ் இசையமைத்துள்ளார். இப்படம் வருகிற ஏப்ரல் 10-ந் தேதி வெளியாக உள்ளது. இப்படம் வெளியாக இன்னும் 20 நாள்களே உள்ள நிலையில் படத்தின் மீதான ரசிகர்களின் எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது.
இந்த படத்தில் அஜித்துடன் இணைந்து திரிஷா, பிரசன்னா, சுனில், அர்ஜுன் தாஸ், பிரபு உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். இப்படத்தின் டீசர், இதுவரை வெளியான தமிழ் படங்களின் டீசரில் 24 மணி நேரத்தில் அதிக பார்வைகளை கடந்த டீசர் என்ற சாதனையை படைத்தது. அதனை தொடர்ந்து 'ஓஜி சம்பவம்' என்ற பாடல் வெளியாகி வைரலாகி வருகிறது.
இந்த நிலையில் இப்படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்துள்ள நடிகர் குறித்த தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி, தெலுங்கு நடிகர் ரகுராம் என்பவர் குட் பேட் அக்லி படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்துள்ளதாக கூறப்படுகிறது. சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான 'டாக்டர்' படத்தில் வில்லன் கும்பலை சேர்ந்த இரட்டையர்களில் ஒருவராக ரகுராம் நடித்து இருப்பார்.