ARTICLE AD BOX
‘குட் பேட் அக்லி’ ரிலீஸில் திடீர் மாற்றம்.. மன உளைச்சலில் அஜித் ரசிகர்கள்.. ஏன் இப்படி..?
தமிழ் சினிமாவில் முக்கிய நடிகர்களில் ஒருவராக இருக்கும் அஜித் குமார், பல படங்களில் நடித்து தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை பிடித்து வைத்திருக்கிறார். மேலும், தற்போது இவர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் “குட் பேட் அக்லி” படத்தில் நடித்துள்ளார். இப்படம் ஏப்ரல் 10ம் தேதி உலகம் முழுவதும் வெளியாக உள்ளதாக படக்குழு அறிவித்திருந்தது. இந்நிலையில், இது தொடர்பாக முக்கிய செய்தி ஒன்று வெளியாகி ரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.
அதாவது, ஏப்ரல் 10ம் தேதி வெளியாக உள்ள குட் பேட் அக்லி படத்தின் முதல் காட்சி ஏப்ரல் 9ம் தேதி இரவு 10.30 மணிக்கு திரையிடப்படும் என்று தகவல் வெளியாகி இருந்தது. இதனால் நீண்ட வருடங்களுக்கு பிறகு இரவு நேரத்தில் வரப்போகும் முதல் காட்சியை கொண்டாட ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் காத்துகொண்டு இருந்தனர். இந்த நிலையில், தற்போது வெளியான தகவலின் படி, குட் பேட் அக்லி திரைப்படத்தின் முதல் காட்சி ஏப்ரல் 10ம் தேதி காலை 9 மணி முதல் தான் தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த செய்தி அஜித் ரசிகர்களை ஏமாற்றமடைய செய்துள்ளது.
The post ‘குட் பேட் அக்லி’ ரிலீஸில் திடீர் மாற்றம்.. மன உளைச்சலில் அஜித் ரசிகர்கள்.. ஏன் இப்படி..? appeared first on EnewZ - Tamil.