ARTICLE AD BOX

சமீபகாலமாக ஆதிக் ரவிச்சந்திரன் ஒரு பத்திரிக்கை பேட்டியில் குட் பேட் அக்லி திரைப்படத்தைப் பற்றி பல தகவல்களை பகிர்ந்து வருகிறார். அது ஒவ்வொன்றாக சமூக வலைதளங்களில் பரவி வைரலாகி வருகின்றது. விடாமுயற்சி திரைப்படத்திற்கு பிறகு அஜித் நடிப்பில் வரும் ஏப்ரல் 10ம் தேதி வெளியாக இருக்கும் திரைப்படம் குட் பேட் அக்லி. படம் ரிலீஸ் ஆக இன்னும் 20 நாட்களே உள்ள நிலையில் அடுத்தடுத்து படத்தைப் பற்றிய அப்டேட்டுகள் வர தொடங்கி இருக்கின்றன.
சமீபத்தில் தான் இந்த படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல ஒரு ரெஸ்பான்ஸை பெற்றது. அதைத்தொடர்ந்து படத்தின் முதல் சிங்கள் வெளியாகி அஜித் ரசிகர்களுக்கு ஒரு கறி விருந்தாக இந்த சிங்கிள் அமைந்திருக்கிறது. அஜித்தை எந்த அளவு நினைத்து பாட வேண்டும் என நினைத்தார்களோ அப்படிப்பட்ட பாடல் வரிகள் இந்த பாடலில் அமைந்துள்ளது. அதனால் படத்தையும் எதிர்பார்த்து ரசிகர்கள் ஆர்வமாக காத்துக் கொண்டிருக்கின்றனர்.
மகிழ்திருமேனி இயக்கத்தில் அஜித் நடித்த விடாமுயற்சி திரைப்படம் சுமாரான வரவேற்பை பெற்றது. இந்த படம் ஒரு சில பேருக்கு மட்டுமே பிடித்திருந்தது. அஜித் ரசிகர்கள் பலருக்கும் இந்த படம் பிடிக்கவில்லை. அதனால் அஜித்தை எப்படி தனக்கு பிடித்த மாதிரி அடுத்த படத்தில் காண போகிறோம் என ரசிகர்கள் காத்துக் கொண்டிருக்க படத்தின் டீசர் அதற்கான ஒரு விடையை கொடுத்திருக்கின்றன.
10 அவதாரங்களில் அஜித் இந்த படத்தில் தோன்றியிருக்கிறார். அதனால் இது முழுக்க முழுக்க ரசிகர்களுக்கான படமாக தான் இருக்கப் போகிறது. குட் பேட் அக்லி படத்திலும் அஜித்துக்கு ஜோடி திரிஷா .கூடவே பிரசன்னா, தெலுங்கு நடிகர் சுனில் ஆகியோர் இந்த படத்தில் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். அஜித்தின் ஒரு தீவிர ரசிகரான ஆதிக் அஜித்தை பிரேமுக்கு பிரேம் எந்த அளவு காட்டவேண்டுமோ அப்படி காட்டி இருப்பார் என்றுதான் ரசிகர்கள் நம்பி இருக்கின்றனர்.

good
அதனை நிரூபிக்கும் வகையில் தான் இந்த படத்தின் டீசர் அமைந்திருந்தது. இந்த நிலையில் குட் பேட் அக்லி படத்தில் திரிஷாவின் கேரக்டர் மிக மிக முக்கியமானது என சொல்லப்படுகிறது. கதைக்கு அவருடைய கதாபாத்திரம் தான் முக்கிய புள்ளியாக அமையப் போகிறது என்றும் தகவல் வெளியாகி வருகின்றன. அதுமட்டுமல்ல இந்த படத்தின் கதையை அஜித்தே த்ரிஷாவிடம் சொன்னதாகவும் திரிஷாவின் கேரக்டரையும் அஜித்தான் அவரிடம் விளக்கியிருப்பதாகவும் ஆதிக் அந்த பேட்டியில் கூறி இருக்கிறார்.
அது மட்டுமல்ல இந்த படத்தில் கார்த்திகேயா அஜித்திற்கு மகனாக நடிக்கிறாராம். அதனால் ஒரு அப்பாவுக்கும் மகனுக்கும் இடையே இருக்கும் ஒரு எமோஷனல் படமாக இது இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதனால் இது குடும்ப ஆடியன்ஸை கவரும் வகையிலும் இருக்கப் போகிறது என்றும் சொல்லப்படுகிறது.