ARTICLE AD BOX
குட் பேட் அக்லி முதல் சிங்கிள்.. யப்பா வேற லெவல்.. ஜிவி பிரகாஷ் சம்பவம் செய்துவிட்டார்
சென்னை: ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்திருக்கும் குட் பேட் அக்லி திரைப்படம் ஏப்ரல் 10ஆம் தேதி வெளியாகவிருக்கிறது. இதன் காரணமாக படத்திலிருந்து அடுத்தடுத்து அப்டேட்டுகள் வர ஆரம்பித்திருக்கின்றன. சமீபத்தில் படத்தின் டீசர் வெளியாகி சக்கைப்போடு போட்டு மாஸ் ரெஸ்பான்ஸை பெற்றது. இதனைத் தொடர்ந்து படத்திலிருந்து முதல் சிங்கிள் இன்று வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி இன்று ஃபர்ஸ்ட் சிங்கிள் ரிலீஸாகியிருக்கிறது.
மகிழ் திருமேனி இயக்கத்தில் அஜித் நடித்த விடாமுயற்சி திரைப்படம் ஓரளவுக்குத்தான் வரவேற்பை பெற்றது. வெகு சிலருக்கே படம் பிடித்திருந்தது. சொல்லப்போனால் அஜித்தின் ரசிகர்கள் பலருக்கு அந்தப் படம் முழு திருப்தியை கொடுக்கவில்லை. ஏகேவுக்கு ஆக்ஷன் ஹீரோ இமேஜ் இருப்பதன் காரணமாக; அவர் ஷட்டிலாக நடித்ததை அவரது ரசிகர்களால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. என்ன அஜித்குமார் அடி வாங்கிக்கொண்டே இருக்கிறார் என்றுதான் பெரும்பாலான ரசிகர்களின் குரலாக இருந்தது. ஆனால் அஜித் அப்படி நடித்ததை வரவேற்றுதான் ஆக வேண்டும் என்று திரை ஆர்வலர்கள் கூறினார்கள்.

குட் பேட் அக்லி: விடாமுயற்சி படத்தில் நடித்துக்கொண்டிருந்தபோதே குட் பேட் அக்லி திரைப்படத்தில் கமிட்டானார் அஜித். மார்க் ஆண்டனி திரைப்படத்தை இயக்கி 100 கோடி ரூபாய் க்ளப்பில் இணைந்த இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் இந்தப் படத்தை இயக்கியிருந்தார். இவர் அடிப்படையில் அஜித்தின் தீவிரமான ரசிகர். நேர்கொண்ட பார்வை படத்தில்கூட ஒரு ரோலில் நடித்திருந்தார். அந்த சமயத்தில்தான் அஜித்திடம் அவர் கதை கூறி ஓகே வாங்கி வைத்திருந்ததாகவும் ஒரு தகவல் ஓடிக்கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
தரமான சம்பவம் காத்திருக்கா?: அஜித்தின் வெறித்தனமான ரசிகர் ஆதிக் ரவிச்சந்திரன் என்பதால் கண்டிப்பாக ஒவ்வொரு ஃப்ரேமையும் பார்த்து பார்த்து செதுக்கியிருப்பார் என்று ரசிகர்கள் நம்பினர். அதனை நிரூபிக்கும் விதமாகத்தான் குட் பேட் அக்லி டீசர் அமைந்திருந்தது. அதனைப் பார்த்த ரசிகர்கள் ஆச்சரியத்தில் வாயடைத்து போயினர். அவ்வளவு மாஸாக அஜித்துக்கு அவர் காட்சிகளை கம்போஸ் செய்திருப்பது உறுதியானது. இதன் காரணமாக விடாமுயற்சியில் மிஸ் ஆன மாஸ் குட் பேட் அக்லியில் கிடைத்துவிடும் என்கிற நம்பிக்கையும் ஃபேன்ஸிடம் பிறந்திருக்கிறது.
இதுதான் கதையா?: படமானது ஏப்ரல் பத்தாம் தேதி உலகம் முழுவதும் ரிலீஸாகவிருக்கிறது. சூழல் இப்படி இருக்க படத்தின் கதை என்று கூறி சில தகவல்கள் கடந்த சில நாட்களாக வெளியாகின்றன. அதாவது அஜித் ஒரு கேங்ஸ்டராக இருந்தவர். அவர் முழுவதுமாக திருந்தி குடும்பத்துடன் நிம்மதியாக வாழ முடிவெடுத்திருக்கும் சமயத்தில் அவருடைய பழைய பகைவர்கள் அவரை மீண்டும் உரசுகின்றன. அந்த பகைவர்களை மீண்டும் அவர் முடித்தாரா இல்லையா என்பதுதான் படத்தின் கதை சுருக்கம் என்று கூறப்படுகிறது. ஆனால் அது எந்த அளவுக்கு உண்மை என்று தெரியவில்லை.
ஜிவி பிரகாஷ் இசை: இதற்கிடையே குட் பேட் அக்லி படத்துக்கு முதலில் தேவிஸ்ரீ பிரசாத்தான் இசையமைப்பதாக இருந்தது. ஆனால் சில காரணங்களால் அவர் வெளியேற; ஜிவி பிரகாஷ் இசையமைப்பாளராக ஒப்பந்தம் செய்யப்பட்டார். ஏற்கனவே ஆதிக்குடன் அவருக்கு நல்ல புரிதல் இருப்பதாலும், பல வருடங்கள் கழித்து அஜித் படத்துக்கு இசையமைப்பதாலும் தரமான சம்பவத்தை தனது இசையில் செய்வார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஜிவியும் தன்னால் முடிந்த அளவுக்கு சிறந்த இசையை கொடுப்பேன் என்று கூறிவந்தார்.
ஓஜி சம்பவம் ரிலீஸ்: இந்நிலையில் படத்தின் முதல் சிங்கிளான ஓஜி சம்பவம் இன்று ரிலீஸாகும் என்று கூறி நேற்று ப்ரோமோ வெளியானது. அதில் ஜிவி, ஆதிக் உள்ளிட்டோர் இடம்பெற்றிருந்தனர். அதன்படி இன்று படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் ரிலீஸாகியிருக்கிறது. பெயருக்கு தகுந்தாற்போலவே பாடலில் ஜிவி பிரகாஷ் சம்பவம் செய்திருப்பதாக பாடலை கேட்ட ரசிகர்கள் மகிழ்ச்சியுடன் கூறிவருகிறார்கள். இப்போது அந்தப் பாடல் சமூக வலைதளங்களில் பயங்கரமாக ட்ரெண்டாக ஆரம்பித்திருக்கிறது.