ARTICLE AD BOX
குட் பேட் அக்லி படத்தின் டீசரில் நடிகர் அஜித் அணிந்து வந்த சட்டை ஒன்றின் விலை லட்சக்கணக்கில் இருப்பதை பார்த்து ரசிகர்கள் வாயடைத்துப் போய் உள்ளனர்.

நடிகர் அஜித்குமார் நடித்துள்ள குட் பேட் அக்லி திரைப்படம் வருகிற ஏப்ரல் மாதம் திரைக்கு வர உள்ளது. அப்படத்தில் நடிகர் அஜித் விலையுயர்ந்த சட்டை ஒன்றை அணிந்திருக்கிறார் அதைப்பற்றி பார்க்கலாம்.

ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித் நடித்துள்ள குட் பேட் அக்லி திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. இதற்கு முக்கிய காரணம் சமீபத்தில் வெளிவந்த அப்படத்தின் டீசர் தான். குட் பேட் அக்லி டீசரில் அஜித்தின் மாஸ் காட்சிகளால் ரசிகர்களை மகிழ்வித்துள்ள ஆதிக், படத்தில் என்னென்ன மேஜிக்கெல்லாம் செய்திருக்கிறாரோ என்பதை அறிந்துகொள்ள ரசிகர்கள் ஆவலோடு காத்திருக்கின்றனர். அப்படம் வருகிற ஏப்ரல் 10ந் தேதி திரைக்கு வர உள்ளது.

குட் பேட் அக்லி படத்தின் டீசர் யூடியூப்பில் பல்வேறு சாதனைகளையும் தகர்த்தெறிந்துள்ளது. தமிழ் சினிமா வரலாற்றில் வெளியான 24 மணிநேரத்தில் அதிக பார்வைகளை அள்ளிய டீசர் என்கிற சாதனையை குட் பேட் அக்லி படைத்துள்ளது. இதற்கு முன்னர் விஜய்யின் மாஸ்டர் பட டீசர் 24 மணிநேரத்தில் 19 மில்லியன் பார்வைகளை பெற்றதே சாதனையாக இருந்த நிலையில், குட் பேட் அக்லி டீசர் ஒரு நாளில் 32 மில்லியன் பார்வைகளை பெற்ற அந்த சாதனை தகர்த்துள்ளது.
இதையும் படியுங்கள்... அஜித்தின் சினிமா வாழ்க்கையில் திருப்பு முனையை ஏற்படுத்தும் குட் பேட் அக்லி – டீசரில் இவ்வளவு விஷயம் இருக்கா?

குட் பேட் அக்லி டீசரில் பல்வேறு சிறப்பம்சங்களும் ஒளிந்திருக்கின்றன. இதில் அஜித்தின் பழைய படங்கள் சிலவற்றின் ரெபரன்ஸும் பயன்படுத்தப்பட்டு இருக்கின்றன. அதையெல்லாம் டீகோடு செய்து வரும் நெட்டிசன்கள் தற்போது மற்றொரு ஆச்சர்ய தகவலையும் கண்டுபிடித்து உள்ளனர். அதன்படி குட் பேட் அக்லி படத்தில் அஜித் அணிந்திருந்த சட்டை ஒன்றின் விலை என்ன என்பதை கண்டுபிடித்து அதை சோசியல் மீடியாவில் ஷேர் செய்து வருகின்றனர்.

அதன்படி குட் பேட் அக்லி படத்தின் டீசரில் அஜித் அணிந்து வந்த வெள்ளை நிற விண்டேஜ் சட்டையின் விலை மட்டும் ரூ.1 லட்சத்து 80 ஆயிரமாம். இது moschino couture என்கிற இத்தாலிய பிராண்ட் சட்டை ஆகும். இந்த சட்டை பார்ப்பதற்கு சிம்பிளாக இருந்தாலும் அதன் விலை லட்சக்கணக்கில் இருப்பதை பார்த்த ரசிகர்கள், இந்த தகவலை வைரலாக்கி வருகின்றனர். அஜித் அணிந்திருந்த ஒரு சட்டையே இம்புட்டு விலையில் உள்ளதால் படமும் செம கிராண்ட் ஆக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படியுங்கள்... யார் அந்த ரம்யா? 5 படத்துக்கும் ஒரே பெயரா? குட் பேட் அக்லி படத்துக்கும் அதே பேர வச்ச ஆதிக் ரவிச்சந்திரன்!