ARTICLE AD BOX
Good Bad Ugly Movie First Single OG Sambavam Promo : அஜித் நடிப்பில் உருவாகியிருக்கும் படம், குட் பேட் அக்லி. இந்த படத்தை ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கியிருக்கிறார். இந்த படத்தின் முதல் சிங்கிள் தற்போது வெளியாகி நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது.
முதல் சிங்கிள் ப்ரமோ வீடியோ:
குட் பேட் அக்லி திரைப்படத்தின் ப்ரமோ வீடியோவை அப்படத்தின் தயாரிப்பு நிறுவனமான மைத்ரி மூவி மேக்கர்ஸ் வெளியிட்டிருக்கிறது. இதில், படத்தின் இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் குமார் உட்பட சிலர் பாடியிருக்கின்றன்ர். இதில் சர்ப்ரைஸே, ஆதிக் ரவிச்சந்திரனும் வாய்ஸ் கொடுத்திருப்பதுதான்.
“தொண்டை கிழிந்து விடும்” என ஜிவி பிரகாஷ் சொல்ல, அதற்கு ஆதிக் “அதெல்லாம் ஒன்னும் பிரச்சனை இல்லை” என்று சொல்லிவிட்டு பின்னர் ‘AK' என்று கத்துகிறார். இத்துடன் அந்த ப்ரமோ வீடியோ முடிகிறது. நாளை (மார்ச் 18) மாலை 5.05 மணியளவில் முழு பாடல் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
எகிறும் GBU எதிர்பார்ப்பு!
நடிகர் அஜித் குமார், என்னதான் தமிழ் திரையுலகின் டாப் நடிகர்களுள் ஒருவராக இருந்தாலும் அவர் சமீப காலங்களாக நடித்து வரும் திரைப்படங்கள் பாக்ஸ் ஆபிஸில் பெரிதாக வசூலை பெறுவதில்லை என்பது அனைவருக்கும் தெரியும். இப்போது வரை, அவரது ரசிகர்கள் சிலருமே கூட அஜித்தின் கெரியர் பெஸ்ட் படம் என்றால் மங்காத்தா அல்லது எண்ணை அறிந்தால் ஆகிய படங்களைதான் கூறுவர். ஆனால் அந்த படங்கள் வெளியாகியே பல ஆண்டுகள் ஆகிவிட்டது. அதற்கு பிறகு அவர் விஸ்வாசம், வலிமை, துணிவு என சில ஹிட் படங்களை கொடுத்தாலும் அதில் ரியல் அஜித்தை பார்த்த உணர்வே இல்லை என்று அவரது ரசிகர்களே உணர்ந்தனர்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ