ARTICLE AD BOX

சென்னையில் இன்று ஆபரண தங்கத்தின் விலை சரிவை கண்டுள்ளது. கடந்த சில நாட்களாக தங்கம் விலை உயர்ந்த நிலையில் இன்று விலை சவரனுக்கு 360 ரூபாய் வரையில் குறைந்து ஒரு சவரன் 64 ஆயிரத்து 200 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதன் பிறகு ஒரு கிராம் 8025 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
இதேபோன்று 24 கேரட் தூய தங்கத்தின் விலையும் குறைந்து ஒரு கிராம் 8754 ரூபாய்க்கும், ஒரு சவரன் 70424 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. மேலும் வெள்ளி விலையில் மாற்றம் இன்றி ஒரு கிராம் 109 ரூபாய்க்கும், ஒரு கிலோ வெள்ளி ஒரு லட்சத்து 9 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.