குடும்பஸ்தன் முதல் சுழல் 2 வரை.. இந்த வாரம் ஓடிடியில் ...

1 day ago
ARTICLE AD BOX

இந்த வாரம் ஓடிடியில் வெளியான மற்றும் வெளியாகவுள்ள சீரிஸ், படங்கள் ஆகியவற்றைப் பார்ப்போம்.

கொரோனா காலகட்டத்திற்கு பிறகு மிகவும் பிரபலமானது ஓடிடி. திரையரங்குகளில் பார்ப்பதைவிட ஓடிடியில் பார்வையாளர்கள் அதிகம். அதுவும் சிலர் திரையரங்கில் ஒருமுறைப் பார்த்துவிட்டு ஓடிடியில் தோன்றும் நேரமெல்லாம் மீண்டும் மீண்டும் பார்ப்பார்கள். அந்த வகையில் இந்த வாரம் இறுதிக்குள் ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ள படங்கள் மற்றும் சீரிஸ்கள் பார்ப்போம்.

பாட்டில் ராதா

குரு சோமசுந்தரம் ஹீரோவாக நடித்து தினகரன் சிவலிங்கம் இயக்கத்தில் உருவான திரைப்படம் பாட்டில் ராதா. குடிப்பழக்கத்தால் அடிமையாகி இருக்கும் நபரின் வாழ்க்கையிலும், அவரது குடும்பத்திலும் ஏற்படும் விஷயங்களை நகைச்சுவை கலந்து சொன்ன திரைப்படம் இது. மக்களிடையே இப்படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. இப்படத்தை ஆஹா ஓடிடியில் பார்க்கலாம்.

பராரி

சாதி சண்டையை மையமாக வைத்து எடுக்கப்பட்ட பராரி படம் கலவையான விமர்சனங்களை பெற்றது. இயக்குனர் எழில் பெரியவேடி இயக்கத்தில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் வெளியான இந்த படத்தை வரும் 28ஆம் தேதி ஆஹா ஒடிடி தளத்தில் பார்க்கலாம்.

சூழல் 2: The Vortex

தமிழில் வெளிவந்த தரமான வெப் சீரிஸ்களில் ஒன்று சூழல்: The Vortex. இன்வெஸ்டிகேஷன் திரில்லர் கதைக்களத்தில் உருவான இந்த வெப் சீரிஸ் கடந்த 2022ம் ஆண்டு அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளிவந்து வெற்றியடைந்தது. இந்த வெப் தொடரை புஷ்கர் & காயத்ரி உருவாக்கியிருந்தனர். மேலும், பிரம்மா ஜி மற்றும் அனுசன் முருகையன் இயக்கியிருந்தார். இதனுடைய இரண்டாம் பாகம் வருகிற 28ம் தேதி முதல் அமேசான் ப்ரைம் ஓடிடியில் ஒளிபரப்பாக உள்ளது. இதில் கதிர், ஐஸ்வர்யா ராஜேஷ் உள்ளிட்ட பலரும் இணைந்து நடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

குடும்பஸ்தன்

மணிகண்டன் நடிப்பில் அறிமுக இயக்குநர் ராஜேஸ்வர் காளிசாமி இயக்கத்தில் உருவான இப்படம் கடந்த மாதம் வெளிவந்து மாபெரும் அளவில் வெற்றியடைந்தது. இப்படத்தில் மணிகண்டன் உடன் இணைந்து சான்வி, குரு சோமசுந்தரம், ஆர் சுந்தர்ராஜன், பாலாஜி சக்திவேல், ஜென்சன் திவாகர் உள்ளிட்டோர் நடித்திருந்தனர். இப்படம் வருகிற 28ம் தேதி ஜீ 5 ஓடிடியில் வெளியாகிறது.

Read Entire Article