குடும்பஸ்தன் படம் ஓடிடியில் ரிலீஸ்! எந்த தேதியில், எந்த தளத்தில் பார்க்கலாம்?

3 hours ago
ARTICLE AD BOX

Kudumbasthan OTT Release : தமிழ் ப்ளாக்பஸ்டர் ஹிட் “குடும்தபஸ்தன்” ஓடிடியில் வெளியீடு – ஒரு மிடில்கிளாஸ் இளைஞனின் தினசரி போராட்டங்கள் குறித்த நகைச்சுவைக் கதையை சொல்லும் படம் எது.

குடும்பஸ்தன் படம்:

நக்கலைட்ஸ் இயக்குநர் ராஜேஸ்வர் காளிசாமி இயக்கத்தில், கே. மணிகண்டன் மற்றும் ஷான்வி மேக்னா முக்கிய வேடங்களில் நடித்துள்ள குடும்தபஸ்தன்.மனதை இலகுவாக்கும் சரவெடி காமெடி கொண்டாட்டமாக படம் உருவாகி இருந்தது.  திரையரங்குகளில் பெரு வெற்றி பெற்ற குடும்தபஸ்தன் படம், குடும்ப ரசிகர்களின் ஆதரவையும் பெற்றது. இப்படத்தில், ‘குட் நைட்’ புகழ் மணிகண்டன், ஷான்வி மேக்னா முன்னணி வேடங்களில் நடிக்க, நிவேதிதா ராஜப்பன், குரு சோமசுந்தரம், ஆர். சுந்தர்ராஜன், குதசனாட் கனகம் ஆகியோர் முக்கிய பாத்திரங்களில் நடித்துள்ளனர்.

கதை என்ன?

கதை நாயகன் நவீன் (மணிகண்டன்), ஒரு கிராபிக் டிசைனர், வேலை இழந்து பிறகு,  அவனது மனைவி வெண்ணிலா (ஷான்வி மேக்னா) கர்ப்பமாக இருப்பதை தெரிந்து கொள்கிறார். வேலை இழப்பு, கடன் சிக்கல்கள், குடும்ப பிரச்சனைகள் என அனைத்தும் சேர்ந்து நவீனின் வாழ்க்கையை படு சிக்கலாக மாற்றுகிறது. அவரின் மோசமான முடிவுகள், தோல்வியுற்ற  சொந்தத்தொழில் முயற்சிகள், அதனுடன் குடும்பத்தில் வரும் அதிர்ச்சியான தருணங்கள் எல்லாவற்றையும் நவீன் எப்படி சமாளிக்கிறான் என்பதை இக்கதை முழுக்க முழுக்க பரப்பரப்புடனும் காமெடியாகவும் சொல்கிறது.

மோசமான வணிக முயற்சிகள், தோல்வியுற்ற ரியல் எஸ்டேட் திட்டம், மற்றும் அவனது மாமா ராஜேந்திரனின் (குரு சோமசுந்தரம்)  உடனான சண்டைகள், என  நவீனின் வாழ்வில் மேலும் மேலும் பல சிக்கல்கள் உருவாகின்றன. குடும்ப உறவுகளின் உணர்வுகளையும், உண்மையையும் கலந்த அழகான இந்தக் கதையில், நவீன் தனது குடும்பத்தை சந்தோஷமாக வைத்துக்கொள்ள என்னென்ன செய்கிறான் எந்த எல்லைக்குப் போகிறான் என்பதை படு  சுவாரஸ்யமாகவும், காமெடியும் கலந்து சொல்கிறது இப்படம். 

எந்த தளத்தில் வெளியாகிறது? எப்போது பார்க்கலாம்?

திரையரங்குகளில் வெளியாகி பெரும் வெற்றி பெற்ற குடும்பஸ்தன் படத்தை, வரும் மார்ச் 7ஆம் தேதி முதல் ஜீ 5 தளத்தில் பார்க்கலாம். இந்த படத்தை தியேட்டரில் தவற விட்டவர்கள், வீட்டில் குடும்பத்துடன் அமர்ந்து இதனை பார்க்க ஆவலுடன் காத்துக்கொண்டுள்ளனர்.

நடிகர்கள் பேசியது:

இயக்குநர் ராஜேஸ்வர் காளிசாமி இது குறித்து கூறியதாவது, "ஒரு அறிமுக இயக்குனராக, ஒரு அற்புதமான குழுவுடன் குடும்பஸ்தன் படத்தை உருவாக்கியது, மிக அபாரமான பயணமாக அமைந்தது. தியேட்டர்களில் நவீனின் பயணத்தை  பார்வையாளர்கள் கொண்டாடியதைக் காண, பெரு மகிழ்ச்சியாக இருந்தது. இப்போது ZEE5 டிஜிட்டல் பிரீமியர் மூலம், அனைத்து மக்களும் இந்த காமெடி என்டர்டெயினரை கொண்டாடுவார்கள் என நம்புகிறேன். என்றார்.

நடிகர் கே. மணிகண்டன் கூறியதாவது, “குடும்பஸ்தனில் ஒரு மிடில்கிளாஸ் இளைஞனாக  நவீன் பாத்திரத்தை ஏற்று நடித்தது,  மிகச் சவாலான அனுபவமாக இருந்தது. குடும்பத்துக்காக ஒரு இளைஞன் படும், துயரங்கள், சிக்கல்கள், அவனின் சாகசங்கள் என மிக உணர்ச்சிகரமான பயணமாக அமைந்தது. நவீன் கதாப்பத்திரம் அனைத்து இளைஞர்களின் பிரதிபலிப்பு. இந்த அற்புதமான திரைப்படத்தை அனைத்து ரசிகர்களும் ZEE5 மூலம் ரசிக்கவுள்ளது, பெரு மகிழ்ச்சியைத் தருகிறது. இப்படம் உங்களை சிரிக்க வைக்கும், சிந்திக்க வைக்கும், குடும்பம் சார்ந்த முடிவுகளில் உங்கள் சிந்தனையை மாற்றும்.” என்ரார்.

மேலும் படிக்க | Anora OTT: 5 ஆஸ்கர் விருதுகளை அள்ளிய ‘அனோரா‘ படம்! எந்த ஓடிடி தளத்தில் பார்க்கலாம்?

மேலும் படிக்க | சுழல் சீசன் 2 ஓடிடி ரிலீஸ் தேதி!! எந்த தளத்தில், எப்போது வெளியாகிறது தெரியுமா?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Read Entire Article