குடிபோதையில் இருந்த கலால் துறையினர்…. தட்டி தூக்கிய காவல்துறையினர்…!!!

5 hours ago
ARTICLE AD BOX

பீகாரில் முதல் மந்திரி நிதிஷ்குமார் தலைமையிலான ஆட்சி நடைபெற்று வருகிறது. கடந்த 2016ம் ஆண்டு முதல் பீகாரில் மதுபான விற்பனை மற்றும் நுகர்வுக்கு அரசு தடைவிதித்துள்ளது. இந்நிலையில் கலால் துறைக்கான காவல் நிலையம் ஒன்றில் காவல்துறையினரே குடிபோதையில் இருந்தது தெரிய வந்தது. இது குறித்து காவல்துறையினருக்கு நேற்று ரகசிய தகவல் கிடைத்தது. அதன்படி காவல் துறையினர் கலால் துறைக்கான காவல் நிலையத்தில் சோதனை நடத்தினர். அதில் கலால் துறையைச் சேர்ந்த 3 காவல்துறையினர் கைது செய்தனர்.

இதுபற்றி காவல் அதிகாரி கூறியதாவது, அவர்கள் 3 பேரும் குடிபோதையில் காவல் நிலையத்தில் நடன நிகழ்ச்சியை பார்த்துக் கொண்டிருந்ததாகவும், அவர்கள் 3 பேரையும் காவல்துறையினர் கைது செய்தனர் என்றும் கூறியுள்ளார். அவர்கள் கலால் துறையைச் சேர்ந்த ஆய்வாளர் சுனில் குமார், துணை ஆய்வாளர் ரத்தன் குமார் மற்றும் கான்ஸ்டபிள் சந்தோஷ் குமார் என்று அடையாளம் காணப்பட்டுள்ளது. 6 காவல்துறையினர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் மற்றும் 3 பேரை காவல்துறையினர் தேடி வருகின்றனர். அவர்களிடம் இருந்து 5லிட்டர்  அளவிலான இந்தியாவில் தயாரிக்கப்பட்ட வெளிநாட்டு மதுபானம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது என்று அவர் கூறினார்.

Read Entire Article