ARTICLE AD BOX
கும்பகோணம்: தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே பட்டீஸ்வரத்தில் ஆயிரம் ஆண்டுகள் பழமையான சோழர்கள் கால மங்களநாயகி சமேத ராமலிங்கசுவாமி கோயில் உள்ளது. இக்கோயில் ராஜராஜசோழனின் 5வது மனைவியான பஞ்சவன்மாதேவியின் பள்ளிப்படை கோயிலாகும்.இக்கோயிலை ரூ.67 லட்சம் மதிப்பீட்டில் புனரமைப்பு செய்யும் பணி இந்து சமய அறநிலையத்துறை சார்பில் நடந்து வருகிறது. இந்நிலையில் இக்கோயிலின் வடக்கு பிரகாரத்தில் நேற்றுமுன்தினம் புதிய கருங்கல் தளம் அமைப்பதற்காக பள்ளம் தோண்டும் பணி நடந்தது.
அப்போது பாதாள அறை ஒன்று இருப்பது கண்டு பிடிக்கப்பட்டது. அந்த அறை முழுக்க முழுக்க கருங்கல்லால் கட்டப்பட்டிருந்தது. 8 அடி ஆழம், 15 அடி நீளம் இருந்தது. இந்த பாதாள அறை படையெடுப்புகளின் போது விக்கிரகங்கள் மற்றும் விலை உயர்ந்த பொருட்களை மறைத்து வைப்பதற்காக உருவாக்கப்பட்டதாக இருக்கலாம். தொல்லியல்துறையினர் ஆய்விற்கு பின்பு, அதில் உள்ள மணல்களை வெளியே எடுத்தால் தான் அறையில் விலை உயர்ந்த பொருட்கள் உள்ளதா என தெரியவரும்.
The post குடந்தை ராமலிங்க சுவாமி கோயிலில் பாதாள அறை கண்டுபிடிப்பு appeared first on Dinakaran.