ARTICLE AD BOX
குஜராத் ஜெயண்ட்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் முதலில் விளையாடிய ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு 7 விக்கெட்டுகளை இழந்து 125 ரன்கள் எடுத்துள்ளது.
மகளிர் பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடரில் பெங்களூருவில் நடைபெற்று வரும் இன்றையப் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் குஜராத் ஜெயண்ட்ஸ் அணிகள் விளையாடி வருகின்றன. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற குஜராத் ஜெயண்ட்ஸ் அணி பந்துவீச்சைத் தேர்வு செய்ய, பெங்களூரு அணி முதலில் விளையாடியது.
இதையும் படிக்க: ஆப்கானிஸ்தானை வீழ்த்த ஆஸி. செய்ய வேண்டியதென்ன? மார்னஸ் லபுஷேன் பதில்!
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு - 127/5
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியில் தொடக்க வீராங்கனைகளாக கேப்டன் ஸ்மிருதி மந்தனா மற்றும் வியாட் ஹாட்ஜ் களமிறங்கினர். பெங்களூரு அணிக்கு தொடக்கம் சிறப்பானதாக அமையவில்லை. வியாட் ஹாட்ஜ் 4 ரன்களிலும், கேப்டன் ஸ்மிருதி மந்தனா 10 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். அதன் பின், கடந்த போட்டிகளில் அதிரடியாக விளையாடி வந்த எல்லிஸ் பெரி 0 ரன்னில் ஆட்டமிழந்து அதிர்ச்சியளித்தார்.
ராகவி பிஸ்ட் 22 ரன்கள், கனிகா அஹுஜா 33 ரன்கள் மற்றும் ஜியார்ஜியா வேர்ஹம் 20 ரன்கள் எடுத்ததன் மூலம் பெங்களூரு அணியின் ஸ்கோர் ஓரளவுக்கு உயர்ந்தது. இறுதியில் அந்த அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 125 ரன்கள் எடுத்தது.
இதையும் படிக்க: ஆப்கானிஸ்தானின் வெற்றிகளை இனி இப்படி கூற முடியாது; சச்சின் டெண்டுல்கர் கூறியதென்ன?
குஜராத் தரப்பில் டீண்ட்ரா டாட்டின் மற்றும் தனுஜா கன்வர் தலா இரண்டு விக்கெட்டுகளைக் கைப்பற்றினர். ஆஷ்லே கார்டனர் மற்றும் கஸ்வி கௌதம் தலா ஒரு விக்கெட்டினைக் கைப்பற்றினர்.
126 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி குஜராத் ஜெயண்ட்ஸ் அணி விளையாடி வருகிறது.