ARTICLE AD BOX
குங்குமப்பூ என்பது சமையலுக்கு பயன்படுத்தப்படுகிறது. மேலும் தோல் பராமரிப்பிற்காகவும் பயன்படுத்தப்படுகிறது. அதுமட்டுமில்லாமல் கர்ப்பிணி பெண்கள் குங்குமப்பூவை சாப்பிடுவதனால் கருவில் வளரும் குழந்தை சிகப்பாக இருக்கும் என சொல்வார்கள். கருவில் வளரும் குழந்தை சிகப்பாக வளர்வதற்கு குங்குமப்பூ உதவி செய்யுமா இல்லையோ ஆனால் அது குழந்தைக்கு பல ஆரோக்கிய நன்மைகளை தரும். அடுத்தது இதில் ஆன்ட்டி ஆக்சிடென்ட்கள் அதிகமாக இருப்பதினால் மன அழுத்தத்தை கட்டுப்படுத்தி மனநிலையை சீராக வைத்திருக்க உதவுகிறது.
குங்குமப்பூ என்பது பசியை கட்டுப்படுத்தி ஆரோக்கியமற்ற உணவுகள் சாப்பிடுவதை தடுக்க உதவுகிறது. இதன் மூலம் உடல் எடையை குறைக்க நினைப்பவர்கள் குங்குமப்பூவை தினமும் எடுத்துக் கொள்ளலாம்.
மேலும் குங்குமப்பூ கண் ஆரோக்கியத்தை பாதுகாப்பதோடு நிம்மதியான தூக்கத்திற்கு வழிவகை செய்கிறது.
எனவே குங்குமப்பூவை தினமும் பாலில் கலந்து சாப்பிடலாம். அதே சமயம் மூச்சுத் திணறல் பிரச்சனை இருப்பவர்கள் வெற்றிலையோடு மிளகு மற்றும் குங்குமப்பூ சேர்த்து எடுத்துக் கொள்ளலாம். அடுத்தது குங்குமப்பூ மூச்சு திணறல் பிரச்சனைக்கு மட்டுமல்லாமல் இதய நோய், உயர் ரத்த அழுத்தம், நீரிழிவு நோய் போன்ற பிரச்சனைகளை தடுக்கவும் உதவுகிறது.
இருப்பினும் இது தொடர்பாக ஏதேனும் சந்தேகம் இருந்தால் உங்கள் மருத்துவரை அணுகி ஆலோசனை பெற்றுக் கொள்வது நல்லது.