கில் காட்டின இந்த 2 விஷயம் போதும்.. அவர் ஒரு தங்கங்க.. குறைவா நினைச்சீங்க – அஸ்வின் கருத்து

3 days ago
ARTICLE AD BOX

இந்திய அணியின் இளம் வீரர் சுப்மன் கில் மீதான சாம்பியன்ஸ் டிராபிக்கு முன்பான விமர்சனங்கள் குறித்து இந்திய அணியின் முன்னாள் வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் கருத்து தெரிவித்து பேசி இருக்கிறார்.

தற்போது சுப்மன் கில் ஒருநாள் கிரிக்கெட் வடிவத்தில் மிகச்சிறந்த ஃபார்மில் இருக்கிறார். அவர் கடைசி நான்கு ஒருநாள் போட்டிகளில் இரண்டு அரை சதங்கள் மற்றும் இரண்டு சதங்கள் அடித்திருக்கிறார். மேலும் இந்த நான்கு போட்டிகளில் மூன்று முறை ஆட்டநாயகன் விருதையும் வென்றிருக்கிறார். மேலும் இந்த வடிவத்தில் ஐசிசி தரவரிசை பட்டியலில் முதல் இடத்தில் இருக்கிறார்.

டெஸ்ட் கிரிக்கெட் உடன் ஏற்பட்ட குழப்பம்

கில் சமீபமாக ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் மோசமாக விளையாடிய காரணத்தினால் அவரை சாம்பியன்ஸ் டிராபி இந்திய அணியில் தேர்வு செய்யக்கூடாது என்று கூறினார்கள். மேலும் அவரை துணை கேப்டனாக கொண்டு வந்திருக்கக் கூடாது என்றும் விமர்சனங்கள் வந்தது.

தற்போது இது குறித்து பேசி இருக்கும் ரவிச்சந்திரன் அஸ்வின் கூறும் பொழுது “சாம்பியன்ஸ் டிராபி இந்தியா அணி அறிவிக்கப்பட்ட பொழுது கில் இந்திய அணியில் இடம் பெறக் கூடாது என்று கூறினார்கள். அவர்கள் டெஸ்ட் கிரிக்கெட் உடன் இதை ஒப்பிட்டு குழப்பிக் கொண்டார்கள். மேலும் அவரை துணை கேப்டனாக நியமித்ததும் தவறு என்று கூறினார்கள். ஆனால் அவர் ஒவ்வொரு போட்டியின் போதும் இந்த கேள்விகளுக்கு பதில் அளித்து இருக்கிறார்”

தங்கம் போன்ற கில்

“வெள்ளைப்பந்து கிரிக்கெட்டில் குறிப்பாக ஒருநாள் கிரிக்கெட்டில் நான் இங்குதான் இருக்கிறேன் என்று அவர் காட்டுகிறார். இந்த வடிவத்தில் அவருடைய புள்ளி விபரங்களும் மிகச் சிறப்பாக இருக்கிறது. மேலும் டி20 வடிவத்திலும் அவர் புள்ளி விபரங்கள் சிறப்பாக இருக்கிறது. டெஸ்ட் கிரிக்கெட் வரும்பொழுது மீண்டும் அவர் பற்றியான விவாதங்கள் கிளம்பும் என்பதை என்னால் புரிந்து கொள்ள முடிகிறது”

இதையும் படிங்க : IND vs PAK.. உத்தேச இந்திய பிளேயிங் XI.. கம்பீர் 2 மாற்றங்களை செய்வாரா.. மிடில் ஓவர் மாறுமா?

“2023 ஆம் ஆண்டு ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடர் கில் திறமைக்கு ஏற்றபடி செல்லவில்லை. ஆனால் பிறகு அவர் ஒரு விதிவிலக்கான மற்றும் இந்த தலைமுறைக்கான வீரர் ஏன்? என்பதை சிறப்பாக விளையாடி காட்டி இருக்கிறார். அவர் முழுமையான தங்கம். அவர் டெம்போவை அமைக்கும் விதம், ரன் துரத்தலை வெற்றிகரமாக அடைவதற்கு அவர் காட்டிய மனோபாவம் அற்புதமானது” என்று கூறியிருக்கிறார்.

The post கில் காட்டின இந்த 2 விஷயம் போதும்.. அவர் ஒரு தங்கங்க.. குறைவா நினைச்சீங்க – அஸ்வின் கருத்து appeared first on SwagsportsTamil.

Read Entire Article