ARTICLE AD BOX
ரோம்: வாடிகனில் கிறிஸ்தவர்களின் தவக்கால தியானத்தை(spiritual retreat)மருத்துவமனையில் இருந்தபடி போப் பிரான்சிஸ் தொடங்கி வைத்தார். கத்தோலிக்க மத தலைவர் போப் பிரான்சிஸ் ரோமில் உள்ள ஜெமெல்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இரட்டை நிமோனியாவால் பாதிக்கப்பட்ட அவர் தற்போது அதில் இருந்து மீண்டு வருகிறார். அவர் உடல்நிலை முன்னேற்றம் அடைந்துள்ளதாக மருத்துவமனை தெரிவித்துள்ளது.
இந்நிலையில் நேற்று முன்தினம் கிறிஸ்தவர்களின் தவக்கால தியானம் வாடிகனில் நடைபெற்றது. இதில் ரோம் மருத்துவமனையில் இருந்தபடி போப் பிரான்சிஸ் வீடியோகான்பரன்ஸ் மூலமாக தவக்கால தியானத்தை தொடங்கி வைத்தார். கத்தோலிக்க திருச்சபையின் புனிதமான தவக்காலத்தை ஈஸ்டருக்கு வழிவகுக்கும் வருடாந்திர கூட்டமான இந்த தியானமானது இந்த வாரம் முழுவதும் தொடர்கின்றது. போப் மருத்துவமனையில் இருந்தே இதில் பங்கேற்பார் என்று வாடிகன் தெரிவித்துள்ளது.
The post கிறிஸ்தவர்களின் தவக்கால தியானம் வீடியோ கான்பரன்ஸ் மூலம் பங்கேற்ற போப் appeared first on Dinakaran.