கிரிக்கெட் வீரர் யுஜ்வேந்திர சஹாலுக்கு அவர் முன்னாள் மனைவி 60 கோடி கேட்டு ப்ளாக்மெயில்?

3 hours ago
ARTICLE AD BOX

இந்திய முன்னணி கிரிக்கெட்டர் யுஜ்வேந்திர சஹால் சமீபத்தில் தனது மனைவியை விவாகரத்து செய்தார். அந்தவகையில் அவரது மனைவி பணம் கேட்டு தொந்தரவு செய்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி சுழற்பந்து வீச்சாளர்களில் ஒருவர் யுஜ்வேந்திர சஹால். இவருக்கு 2013 ஆம் ஆண்டில், இந்தியன் பிரீமியர் லீக்கில் (ஐபிஎல்) மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாட வாய்ப்பு கிடைத்தது. பின்னர், அவர் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்காக பல சீசன்களில் விளையாடி தனது திறமையை நிரூபித்தார்.

தற்போது, ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார். இவர் 2016ம் ஆண்டு இந்திய தேசிய கிரிக்கெட் அணியில் அறிமுகமானார்.

இதையும் படியுங்கள்:
ஐந்தடி மரத்தில் 80 கிலோகிராம் பழங்கள் - மெண்டரின் தோடம்பழச் செடிகள்!
dhanashree and Chahal

மிக விரைவிலேயே தனது முழு முயற்சியாலும் திறமையாலும் இந்திய அணியின் முக்கிய வீரராக மாறினார். டி20 போட்டிகளில் அவரது பந்துவீச்சு மிகவும் சிறப்பாக இருந்தது.. சஹால் டி20 சர்வதேச போட்டிகளில் 6 விக்கெட்டுகளை வீழ்த்திய இரண்டாவது வீரர் மற்றும் முதல் இந்தியர் என்ற சாதனையை படைத்துள்ளார்.

அந்தவகையில், சஹால், தனஸ்ரீ வர்மா என்பவரை 2020ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். சில காரணங்களால் இருவரும் கடந்த 18 மாதங்களாக தனித்தனியாக வாழ்ந்து வந்துள்ளனர். தற்போது இருவரும் பரஸ்பர சம்மதத்துடன் விவாகரத்து பெற்று பிரிவதாக முடிவெடுத்துள்ளனர்.

இதனையடுத்து சஹாலின் முன்னாள் மனைவி தனஸ்‌ரீ அவரிடம் 60 கோடி கேட்டு டார்ச்சர் செய்வதாக தகவல் வெளியாகியுள்ளன. ஆனால், இதற்கு தனஸ்‌ரீ மறுப்புத் தெரிவித்திருக்கிறார். அதாவது, “நாங்கள் இந்த தகவலைக் கண்டு மிகவும் அதிருப்தியடைந்துள்ளோம்.

இதையும் படியுங்கள்:
தம்ஸ் அப் போடுங்க… உங்க தம்ஸ் என்ன சொல்லுதுன்னு கேளுங்க!
dhanashree and Chahal

நாங்கள் தெளிவாக இருக்கிறோம். நாங்கள் எந்த தொகையையும் கோரவில்லை. இது போன்ற உறுதி செய்யப்படாத தகவல்கள் சம்பந்தப்பட்ட நபரை மட்டுமின்றி, அவர்களது குடும்பத்தினரையும் பாதிக்கும்” எனத் தெரிவித்துள்ளார்.

உண்மையில் தனஸ்‌ரீ பணம் கேட்டாரா இல்லையா என்பது இன்னும் அதிகாரப்பூர்வமாகவோ சஹால் பக்கத்திலிருந்தோ வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Read Entire Article