"கிங்ஸ்டன்" படத்தின் ஸ்பெஷல் கேரக்டரை அறிமுகப்படுத்திய படக்குழு

2 hours ago
ARTICLE AD BOX

சென்னை,

ஜி.வி. பிரகாஷ் குமார் நடிப்பில் உருவாகும் அவரது 25-வது படத்திற்கு 'கிங்ஸ்டன்' என்று தலைப்பிடப்பட்டு இருக்கிறது. இந்த படத்தை ஜி.வி. பிரகாஷின் பேரலல் யுனிவர்ஸ் பிக்சர்ஸ் மற்றும் ஜீ ஸ்டூடியோஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரித்து உள்ளன. கிங்ஸ்டன் படத்தை இயக்குனர் கமல் பிரகாஷ் எழுதி, இயக்கியுள்ளார். இது ஜி.வி. பிரகாஷ் தயாரிக்கும் முதல் படம்.

இந்த படத்தில் நடிகை திவ்யபாரதி, ஜி.வி.பிரகாஷுக்கு ஜோடியாக நடிக்க உள்ளார். பேச்சுலர் படத்திற்கு பிறகு இந்த ஜோடி மீண்டும் இணைந்து உள்ளனர். இந்த படத்தில் சேத்தன், அழகம் பெருமாள், இளங்கோ குமரவேல் என பலர் நடித்திருக்கிறார்கள். இப்படம் மார்ச் 7-ம் தேதி வெளியாக உள்ளது. இதற்கிடையில் இப்படத்தின் பாடல் வெளியாகி வைரலாகி வருகின்றன.

இந்த படமானது இந்தியாவின் முதல் கடல் பேய் படமாகும். எனவே படத்தின் மீதான எதிர்பார்ப்பு மிகப்பெரிய அளவில் இருந்து வருகிறது. மேலும் இந்த படத்தின் டீசர் ஏற்கனவே சமூக வலைதளங்களில் வெளியான நிலையில் இன்று இப்படத்தின் டிரெய்லரை படக்குழு வெளியிட இருக்கிறது. அதன்படி சென்னையில் இப்படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா நடைபெற்று வருகிறது.

விழாவில் 'கிங்ஸ்டன்' படத்தின் ஸ்பெஷல் கதாபாத்திரமான கடல் பேயை படக்குழு அறிமுகப்படுத்தியுள்ளது. இதைப் பார்த்த ரசிகர்கள் அப்படியே ரியலிஸ்டிக்காக இருப்பதாகவும் பயமாக இருப்பதாகவும் சமூக வலைதளங்களில் கமெண்ட் செய்து வருவதோடு இந்த புகைப்படங்களையும் இணையத்தில் வைரலாக்கி வருகின்றனர்.

Saw #Kingston trailer - looks terrific a grand sea fantasy adventure on the way from the duo of @gvprakash and @storyteller_kp.What happens when a village is cursed and a man decides to go into dangerous waters to fix things. Visuals, scale, production value on point pic.twitter.com/hcc94LmzRi

— Siddarth Srinivas (@sidhuwrites) February 27, 2025

Read Entire Article