ARTICLE AD BOX
கிங்ஸ்டன் திரைப்படம் தோல்வியடைந்ததால் ஜி.வி.பிரகாஷுக்கு மீண்டும் ஏமாற்றம் ஏற்பட்டுள்ளது.
நடிகரும் இசையமைப்பாளருமான ஜி.வி.பிரகாஷ் தனது சொந்த தயாரிப்பு நிறுவனமான பேரலல் யூனிவர்ஸ் பிக்சர்ஸ் மற்றும் ஜீ ஸ்டூடியோஸ் தயாரிப்பில் நடித்த கிங்ஸ்டன் திரைப்படத்தை இயக்குநர் கமல் பிரகாஷ் எழுதி, இயக்கியிருந்தார்.
இதையும் படிக்க: மம்மூட்டிக்கு புற்றுநோயா? செய்தி தொடர்பாளர் விளக்கம்!
கடலில் உள்ள மர்மத்தைக் கண்டறியும் மீனவரின் கதையாக எடுக்கப்பட்ட இந்தப் படத்தில் ஜி.வி.பிரகாஷ் மீனவராக நடித்திருந்தார்.
கடந்த மார்ச். 7 ஆம் தேதி வெளியான இப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றாலும் வணிக ரீதியாக சுமாரான வசூலையாவது வசூலிக்கும் என எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால், ரூ. 20 கோடி பட்ஜெட்டில் உருவான இப்படம் ரூ. 5 கோடிக்கும் குறைவாக திரையரங்க வசூலாக ஈட்டியுள்ளதாகக் கூறப்படுகிறது. இசையமைப்பாளராக ஜொலிக்கும் ஜி.வி.பிரகாஷுக்கு நடிகராக இன்னும் அழுத்தமான படம் எதுவும் அமையவில்லை.
தன் 25-வது படமான கிங்ஸ்டனில் வெற்றி பெறுவார் என அவரின் ரசிகர்கள் எதிர்பார்த்திருந்த நிலையில், இப்படம் தோல்வியடைந்துள்ளதால் ஜி.வி.யே கடும் ஏமாற்றத்தில் இருக்கிறாராம்.