காவல் நிலையத்தில் சீமான்! போலீஸ்-நாதகவினர் தள்ளுமுள்ளு! கதறி அழுத வீரப்பன் மகள்!

3 hours ago
ARTICLE AD BOX

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வளசரவாக்கம் காவல் நிலையத்தில் ஆஜரானார். இதனால் வீரப்பன் மகள் கதறி அழுதார். சீமான் தன்னை திருமணம் செய்து கொள்வதாக கூறி ஏமாற்றிவிட்டதாக நடிகை விஜயலட்சுமி கடந்த 2011ம் ஆண்டு காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். பின்பு புகாரை வாபஸ் பெற்ற அவர் மீண்டும் போலீசில் புகார் கொடுத்திருந்தார். இந்த புகாரின் அடிப்படையில் போலீசார் சீமான் மீது வழக்குபதிவு செய்யப்பட்டது. 

இந்த வழக்கு தொடர்பாக காவல் நிலையத்தில் ஆஜராகி இருந்த சீமான், தனக்கு எதிரான பாலியல் வன்கொடுமை வழக்கை ரத்து செய்ய வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். அதே வேளையில் போலீஸ் வழக்கை ரத்து செய்யக்கூடாது என தெரிவித்து இருந்தது. ஆனால் சீமான் வழக்கை தள்ளுபடி செய்த உயர்நீதிமன்றம் அவர் தான வழக்கை 12 மாத காலத்திற்குள் முடித்து இறுதி அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் எனவும் காவல்துறைக்கு உத்தரவிட்டார். 

உயர்நீதிமன்றம் உத்தரவின்பேரில் சீமான் நேற்று ஆஜாராக போலீஸ் சம்மன் அனுப்பினார்கள். ஆனால் அவர் நேற்று நேரில் ஆஜராகவில்லை. இதனால் அவர் இன்று ஆஜராக வேண்டும் என போலீஸ் ஒட்டினார்கள். அதன்படி நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வடபழனியில் உள்ள தனியார் ஹோட்டலில் இருந்து காரில் வந்த சீமான் போலீஸ் நிலையத்தில் இன்று இரவு ஆஜரானார். முன்னாதாக பெரும் களேபரங்களுக்கு மத்தியில் சீமான் போலிஸ் நிலையத்தில் ஆஜரானார்.

முன்னதாக அவர் ஹோட்டலில் இருந்து கிளம்பி இரவு 8 மணிக்கு ஆஜராக இருந்த நிலையில், போலீசார் சீமானை 9.15 மணிக்கு ஆஜாராக சொன்னார்கள். இதனால் சீமான் நடுவழியில் நிறுத்தி வைக்கப்பட்டார். பின்பு சீமான் இரவு 9.15 மணியளவில் வளசரவாக்கம் காவல் நிலையத்துக்கு காரில் வந்தனர். அங்கு கூடியிருந்த ஆயிரக்கணக்கான தொண்டர்கள் சீமான் காரை சூழ்ந்து கொண்டு போலீசுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

இதன்பின்னர் ஒருவழியாக சீமானை காரில் இருந்து இறங்கிய போலீஸ் நிலையத்தில் ஆஜரானார். சீமானுடன் ஒருசில வழக்கறிஞர்கள் மட்டும் உள்ளே செல்ல அனுமதிக்கப்பட்டனர். நாம் தமிழர் கட்சியின் துரைமுருகனும் உள்ளே செல்ல அனுமதிக்கப்படவில்லை. இதனால் நாம் தமிழர் கட்சியினர் தடுப்புகளை தாண்டி உள்ளே செல்ல முயன்றதால் அங்கு பரபரப்பு நிலவியது. மேலும் வீரப்பனின் மகள் வித்யாராணி போலீஸ் நிலையம் உள்ளே செல்ல முயன்றபோது போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தினார்கள்.

இதனால் போலீசுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட வித்யாராணி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு கதறி அழுதார். சீமானிடம் போலீசார் விசரணையை தொடங்கியுள்ளனர். வளசராக்கம் ஆய்வாளர் மற்றும் இணை ஆணையர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Read Entire Article