காவல் துறையை இனி தூங்கவிடமாட்டேன்: அண்ணாமலை

2 hours ago
ARTICLE AD BOX

இன்று இரவு முதல் காவல் துறையை தூங்கவிடமாட்டேன் என்று கைதாகி விடுதலை செய்யப்பட்ட பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

டாஸ்மாக் ஊழலுக்கு எதிராக பாஜக நடத்தும் போராட்டத்துக்குச் சென்ற மாநில தலைவர் அண்ணாமலை இன்று(மார்ச் 17) கைது செய்யப்பட்டார்.

சென்னையை அடுத்த கானத்தூரில் உள்ள வீட்டில் இருந்து புறப்பட்ட அண்ணாமலையை, அக்கரை அருகே தடுத்து நிறுத்திய காவல் துறையினர் கைது செய்து, தனியார் மண்டபத்தில் அடைத்து வைத்தனர்.

அண்ணாமலை - காவல் துறையினர் இடையே நீண்டநேர வாக்குவாதத்துக்குப் பிறவு இன்றிரவு 7 மணிக்கு அண்ணாமலை மற்றும் பாஜகவினரை காவல் துறையினர் விடுதலை செய்தனர்.

இதையும் படிக்க: பாஜகவினர் உள்ளிருப்பு போராட்டம்: மயக்கமடைந்த பெண்ணால் பரபரப்பு!

இதனைத் தொடர்ந்து அண்ணாமலை செய்தியாளர்களிடம் பேசுகையில், ”வரும் 22 ஆம் தேதி மீண்டும் சென்னையில் போராட்டம் நடத்த வாய்ப்புள்ளது. காவல் துறை உயர் அதிகாரிகள் நடந்துகொண்ட விதம் கண்டிக்கத்தக்கது. போராட்டத்தைத் தீவிரப்படுத்துவோம். காவல் துறையினர் இனி நிம்மதியாக தூங்கக் கூடாது.

பாஜக தொண்டர்கள் டாஸ்மாக் கடைகளில் முதல்வரின் படத்தை மாட்டுவார்கள். ” என்றார்.

Read Entire Article