காளியம்மாள் எந்த கட்சியில் சேரலாம்?.. திமுக வேண்டாம்.. ஒன் இந்தியா சர்வேயில் வந்த ரிசல்ட் இதோ

1 day ago
ARTICLE AD BOX

காளியம்மாள் எந்த கட்சியில் சேரலாம்?.. திமுக வேண்டாம்.. ஒன் இந்தியா சர்வேயில் வந்த ரிசல்ட் இதோ

Chennai
oi-Pavithra Mani
Subscribe to Oneindia Tamil

சென்னை: நாம் தமிழர் கட்சியின் மகளிர் பாசறை மாநில ஒருங்கிணைப்பாளர் காளியம்மாள் அக்கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். இந்நிலையில், காளியம்மாள் எந்த கட்சியில் சேர்ந்தால் நல்லது என்று ஒன் இந்தியா தமிழ் சார்பில் கருத்துக் கணிப்பு நடத்தப்பட்டது. இதில் மக்கள் தெரிவித்துள்ள கருத்து குறித்து தெரிந்து கொள்ளலாம்.

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமனாக்கு எதிராக அக்கட்சியில் நிர்வாகிகள் பலர் கடும் அதிருப்தியை தெரிவித்து வருகின்றனர். கட்சியின் முக்கிய நிரவாகிகள், மாவட்ட தலைவர்கள், பொறுப்பாளர்கள் பலர் தொடர்ந்து தாங்கள் விலகுவதாக அறிவித்து வருகின்றனர். ஆனால், இதுபற்றி எதையுமே பொருட்படுத்திக் கொள்ளாமலும், கருத்து கூறாமலும் இருந்து வந்தார் சீமான்.

Kaliammala NTK

இந்நிலையில், மகளிர் பாசறை மாநில ஒருங்கிணைப்பாளரான காளியம்மாளுக்கும் கட்சியின் மீது அதிருப்தி இருப்பதாகவும், கருத்து முரண் இருப்பதாகவும் அக்கட்சி வட்டாரத்தில் தகவல் வெளியாகி வந்தன. விரைவில் அக்கட்சியில் இருந்து காளியம்மாள் விலக இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி வந்தன. தனது முடிவு குறித்து காளியம்மாள் விரைவில் அறிவிப்பேன் என்று காளியம்மாள் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், நாம் தமிழர் கட்சியில் இருந்து விலகுவதாக இன்று காளியம்மாள் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். இதைத்தொடர்ந்து, காளியம்மாள் எந்த கட்சியில் சேர்ந்தால் நல்லது என்று ஒன் இந்திய தமிழ் சார்பில் கருத்துக் கணிப்பு நடத்தப்பட்டது. இந்த கருத்துக் கணிப்பில் ஒரே நாளில் 12 ஆயிரத்துக்கும் அதிகமானோர் ஓட்டு போட்டுள்ளனர்.

காளியம்மாள் எந்த கட்சியில் சேர்ந்தால் நல்லது? என்று கேள்வி கேட்கப்பட்டிருந்தது. அதற்கு, திமுக, அதிமுக, தவெக, தனிக்கட்சி, ஓய்வு பெறலாம் என்று 5 ஆப்ஷன்கள் கொடுக்கப்பட்டிருந்தன. இந்தக் கேள்விக்கு தற்போது வரை 12,735 பேர் ஓட்டு போட்டுள்ளனர். அதில், திமுகவில் சேரலாம் என்று 24.19 சதவீதம் பேரும், அதிமுகவுக்கு 6.71 சதவீதம் பேரும், தவெகவுக்கு 29.47 சதவீதம் பேரும். தனிக்கட்சிக்கு 4.63 சதவீதம் பேரும், ஓய்வு பெறலாம் என்று 35.01 சதவீதம் பேரும் வாக்களித்து உள்ளனர்.

இதில் தற்போது வரை அதிகபட்சமாக காளியம்மாள் ஓய்வு பெறலாம் என்று 35.01 சதவீதம் பேரும், அதற்கு அடுத்தபடியாக தவெகவில் சேரலாம் என்று 29.47 சதவீதம் பேரும் ஓட்டு போட்டுள்ளனர்.

நாம் தமிழர் கட்சியில் இருந்து விலகுவதாக காளியம்மாள் வெளியிட்ட அறிக்கையில், இதுவரை இல்லாத கனத்த இதயத்தோடு எழுதுகிறேன். கட்சியில் பயணித்த ஒவ்வொரு கணமும் உண்மையும், நேர்மையுமாய் உளப்பூர்வமாக என் குடும்பத்திற்கும் மேலாக நேசித்து வந்தேன். இந்த 6 ஆண்டுகால பயணம் எனக்கு அரசியல் ரீதியான பல அனுபவங்களை கொடுத்துள்ளது. பல உறவுகள் அக்கா, தங்கையாகவும் அண்ணன், தம்பிகளாகவும் கிடைத்ததையும் அவர்கள் என்னுடன் பழகிய விதங்களையும் எண்ணி மகிழ்கிறேன்.

நமக்கெல்லாம் ஒரே பெருங்கனவு தான், அது தமிழ்த் தேசியத்தின் வெற்றியும், அதனை மக்களிடம் கொண்டு சேர்த்தல் என்னும் உன்னத நோக்கமும். அந்த நோக்கத்தை அடைய வேண்டும் என்ற பாதையில் நானும் ஒரு பகுதியாய் இணைந்து பயணித்ததில் நான் பெருமை கொள்கிறேன். ஆனால், இப்பாதை இவ்வளவு சீக்கிரம் முடியும் என நான் கனவிலும் நினைக்கவில்லை, கடந்த 6 வருடகாலமாக ஒரு சமூக மாற்றத்திற்காக ஒரு பெண்ணாக இருந்து எவ்வளவு போராட முடியுமோ, என் ஆற்றலையும் மீறி உங்கள் எல்லோர் அன்பாலும், நம்பிக்கையாலும் இந்த களத்தில் நின்றிருக்கிறேன்.

எனினும் காலத்தின் சூழல், உயிராக எண்ணி, வழிநடந்த நாம் தமிழர் கட்சி எனும் இந்த பாதை இத்துடன் முடித்து வைக்கப்படுகிறது என்பதை மிகவும் வருத்தத்துடன், கனத்த இதயத்துடனும் தெரிவித்துக்கொள்கிறேன். இங்கு பயணித்ததில் பலரின் அன்பு, அக்கறை, நம்பிக்கை என் மீதான அளவற்ற பாசம் என்ற அனைத்தையும் மனதில் நிலைநிறுத்தியுள்ளேன்.

என்னுடன் இத்தனை நாட்களாக உண்மையாய், உறவாய் பழகிய, பயணித்த, களத்தில் இன உணர்வோடு நின்று நேர்மையாய் வேலை செய்த அத்தனை உறவுகளுக்கும், உண்மையான உழைப்பாளர்களுக்கும், உலகத்தமிழர்கள் மற்றும் நாம்தமிழர் உறவுகளுக்கும் நன்றிகளை சொல்வதோடு என் வருத்தங்களையும் பகிர்ந்து கொள்கிறேன். ஒரு சாமானிய குடும்பத்தில் பிறந்து, பிறந்த இனத்துக்காக தமிழ்த் தேசிய களத்தில் ஓடிய என் மீது மிகுந்த நம்பிக்கையும் அன்பும் வைத்து களமாடிய உங்கள் அத்துணை பேருக்கும் என்னுடைய சிரம் தாழ்ந்த நன்றிகள்.

Kaliammala NTK

எனக்கான நெருக்கடிகள் நிறைய நிறைய வந்த போதும் என்மீது நீங்கள் கொண்டுள்ள நம்பிக்கையாலும், நான் உங்கள் மீது கொண்ட அன்பினாலும், எந்த முடிவும் எடுக்காமல் அமைதியாக இருந்தேன். ஆனால் இப்படி ஒரு முடிவை எடுக்க வேண்டிய சூழல் வந்துவிட்டதை எண்ணி மனம் வருந்துகிறேன். அவதூறு வெறும் வார்த்தைகள் தானே என்று நினைத்து அள்ளி தெளிப்பவர்களுக்கு மத்தியில், என் மீது அளப்பரிய அன்பு கொண்டு நேசிக்கிற உங்கள் அத்தனை பேருக்கும் நான் என்றென்றும் கடமை பட்டவளாக இருப்பேன்.

என்னுடைய இந்த முடிவு பலருக்கு வருத்தத்தைத் தரலாம், எனக்கும் தான். காலத்தின் வழிநடத்தல்! என்றும் தமிழ்த்தேசியத்தை விதைக்கும் வழியில் எம் பயணம் தொடரும்... நன்றி, வண்க்கம், நாம் தமிழர் ! என்று தெரிவித்தார்.

More From
Prev
Next
English summary
Nam Tamil Party executive Kaliammal has announced his resignation from the party. In this case, an opinion poll was conducted by One India Tamil on which party Kaliammal should join. You can find out about the opinions expressed by people.
Read Entire Article